ஞானசாரருக்கு பொது மன்னிப்பு, வழங்கியது ஒருதலைபட்சமானது - பேராசிரியர் திஸ்ஸ விதாரண
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளமை ஒருதலைபட்சமானது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நீதியினை கோரும் போது பிரச்சினைகளே ஏற்படும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஞானசார தேரர் கடுமையான முறையில் பிற இனங்கள் மீது இனவாத கருத்துக்களை பகிரங்கமாக கட்டவிழ்த்து விட்டார். இதன் காரணமாக பல விளைவுகள் ஏற்பட்டன. இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் சிறைவாசம அனுபவித்த ஞானசார தேரரை எவரும் எதிர்பாராத விதத்தில் பொதுமன்னிப்பு வழங்கியமை வருந்தத்தக்கது. ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் காணப்படலாம். ஆனால் அதனை முறையாக செயற்படுத்தியிருக்க வேண்டும். இவரது விடுதலையினை தொடர்ந்து மறுபுறம் பாதிக்கப்பட்டவர்கள் நீதித்துறையினை நாடும் போது பிரச்சினைகளே ஏற்படும் என்றார்.
Post a Comment