Header Ads



பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால், ஏனையவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதப்பட முடியாது

சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால் ஏனையவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதப்பட முடியாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -14- நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பயங்கரவாதம் இன்று உலகின் அனைத்து நாடுகளும் எதிர்நோக்கியுள்ள பிரதான சவால் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு தற்பொழுது சர்வதேச தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை விடவும் ஒரு அரசியல் குழுவினால் பாரிய ஆபத்து நிலைமை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் அரசாங்கம் என்ற ரீதியில் சில குறைபாடுகள் காணப்படுகின்றது என்பதனை தாம் ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

துரதிஸ்டவசமாக அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கிலான நபர்கள் சிலர் மீண்டும் கறுப்பு ஜூலை கலவரத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் காரணத்தினால் ஏனைய மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகிவிட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இந்து மக்களும் இந்த நாட்டின் முதல் தரப் பிரஜைகள் எனவும் ஒரே சமமானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

6 comments:

  1. Superb my dear minister Hon. Mangala!, you are one of the very rare genuine politicians in Sri Lanka who always have fair view of other community and humanity! i have never seen you stand with unfair! you always bring the truth to public of political thugs who are always play with human soul and property for their political benefits.

    ReplyDelete
  2. this is the most important stance has to be followed by all sri lankans dreaming prosperous nation...

    ReplyDelete
  3. நன்றி மங்கள, 2015 பட்ஜெட் உரையில் 2013ல் ’கோ’ என்னை கைது செய்தது நாடுகடத்தல் விசா நிராகரிப்பு தொடர்பாக நீங்கள் பகீரங்கமாக வருத்தம் தெரிவித்தது மீண்டும் என்னை நாட்டுக்கு வர அழைத்தது என உங்கள் மனிதாபிமானத்துக்கு நானும் தனிப்பட்ட நன்றி சொல்ல கடமைப்பட்டவவன். முஸ்லிம்களின் இக்கட்டான சூழலிலுங்களைப்போன்ற ஒருசிலர் அமைச்சர் அவையில் இருப்பது மட்டுமே நாட்டின்மீது நம்பிக்கை தருகிறது.

    ReplyDelete
  4. இரன்டாந்தரப் பிரஜைன்னாலும் பரவாயில்லை - எந்தவித உரிமையும் இல்லாத அடிமைச்சமூகமாக பார்க்கிறதும் அடிக்கிறதும் வெட்டுவதும் குத்துவதும் எரிப்பதும் அழிப்பதுவும் - இப்படியே போய் இப்ப போர்ற உடையிலயும் கைவச்சுட்டானுவ - இனி அவுத்துப் போட்டு அம்மணமா திரங்கடான்னு சொல்ற வரைக்கும் உடமாட்டானுவ போல.....

    ReplyDelete

Powered by Blogger.