Header Ads



குற்றமற்றவர்கள் எவரேனும் கைது செய்யப்பட்டுள்ளார்களா..? உடனே தொடர்பு கொள்ளுங்கள்...!

- Rauf Hazeer -

குற்றமற்றவர்களுக்கான 
குரல் !
( இப் பதிவு , உங்களுக்கு தெரிந்த குற்றமற்றவர்களை நீங்கள் அறிவுறுத்துவதற்காக )

"ஏப்ரல் 21 குண்டு வெடிப்புகளோடு சம்பந்தப்பட்டவர் என சந்தேகத்தில் விசாரணைகளுக்காக....."
என்கிற சொற்றொடருடனேயே அனைத்து கைதுகளும் பதியப்பட்டுஉள்ளன.

கத்தி , வாள் , அரபுகிதாபு , கGமா களிசன் , மேலதிக சிம் , மாத்திரமல்ல சந்தேகத்திற்கிடமாக பாதையோரத்தில் நின்றுகொண்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டுகளையும் பரவலாக அனைத்து B அறிக்கைகளிலும் (போலீசாரின் வழக்குப்பதிவு ) இவ்வாறே காண முடிகிறது.
*************************
இவை அனைத்தும் அனாவசியமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் (PTA) பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிணை வழங்க மாட்டார்கள். 
*************************
சிலர் லட்சக்கணக்கில் வக்கீலுக்கு செலுத்தி வாராவாரம் ஏமாறிக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே சட்ட ரீதியாக அணுக முதல், அரசியல் ரீதியாக சில முன்னெடுப்புகள் எடுக்கப்படவேண்டிய உள்ளது.

சட்ட மா அதிபர் , பாதுகாப்பு செயலாளர் போன்றவர்களால் உயர்மட்ட அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு PTA எனும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்திலிருந்து இவை அகற்றப்பட்டால் மட்டுமே பிணை அல்லது தண்டப் பணத்துடனான ( கத்தி,வாள் , கணக்கில் காட்டப்படாத பணம் போன்றவற்றிற்கு ) விடுதலையை பெறலாம்.

அரபு கிதாபுகள், நெட்டில் பயங்கரவாத வீடியோ பார்த்தது , தடை செய்யப்படாத தவ்ஹீத் அமைப்புகளின் அங்கத்தவராக இருந்தது ......என நேரடி பயங்கரவாத தொடர்பற்ற அனைத்தும் PTA யிலிருந்து அகற்றப்பட்டபின், பிணை அல்லது விடுதலைக்குரியவையே.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழு பிரதமரை சந்தித்து அவர் மூலமாக சட்ட மா அதிபருடன் கதைத்ததன் விளைவாக " குற்றமற்றவர்கள் "  என ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமானவர்களின் கோவைகளை மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணியும் , முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமான நிஸாம் காரியப்பர் தலைமையிலான எமது சட்டத்தரணிகள் குழு சமர்ப்பிக்கும் ஆவணங்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவென , சட்ட மா அதிபர் அலுவலகத்தில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இறைவன் அருளால் இந்த மலையேறும் முயற்சியில் பாதித்தூரம் இளைக்க இளைக்க ஏறிவிட்டோம்.

நீதித்துறை சார்ந்த மேலதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வென்று தர்க்க ரீதியுடனான  அறிக்கை தலைவரின் வழிகாட்டுதலுடன் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களின் தலைமையிலான எங்கள் சட்டத்தரணிகளால்  ( சல்மான் , பாயிஸ் , ஜவஹர்ஷா , ஷிபான் ....) 
தயார்படுத்த படுகிறது. 

விடுமுறை நாளென்றில்லாது இன்றும் நாளையும் தாருஸ்ஸலாமில் இப்பணி இவர்களின் பங்கு பற்றலுடன் நடைபெறுகிறது .

B Report உடன் எங்களுக்கு தரப்பட்ட கோவைகளை தனித்தனியாக ஆராய்ந்து, வகைப்படுத்தி , தொழில் தேர்ச்சி மிக்க ஆவணவமாக AG Office ற்கு சமர்ப்பித்தால் மட்டுமே சாணேறி முழம் சறுக்காதிருக்கலாம்.

நூற்றுக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்திருந்தாலும் பாதிக்கு மட்டுமே B Report கள் உள்ளன.
இப்போதைக்கு வக்கீலுக்கு பணம் செலுத்தி வழக்காடுவதை விட்டு அவர் மூலமாக B Report ஐ பெற்றுக்கொள்வதே முக்கியமானது.

எங்களுக்கு இதுவரை  B Report கொண்டுவந்து தராத அல்லது e mail பண்ணாதவர்களை பல தடவைகள் தொடர்புகொண்டும் பலனில்லாதுள்ளது .

வெறும் தகவல் மட்டும் கறிக்குதவாது ,  B Report மிக மிக முக்கியமான ஆவணம்.
உங்கள் வக்கீலுக்கு இப்போதைக்கு இதையாவது பெற்றுத்தர வற்புறுத்துங்கள்.
இப்பணியில் எமது வெற்றிக்கு புனித நோன்புடன் துஆ செய்யுங்கள்.
இதன் வெற்றி எமது முயற்சிகளைவிட உங்கள் பிரார்த்தனைகளிலேயே தங்கியுள்ளது.
இதுவரை தொடர்புகொள்ளாதவர்களுக்கு 011 243 6752 ,

( பதில் இல்லாத போது மட்டும் 077 4351729 ) வுடன் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள்.

நன்றி.

3 comments:

  1. NTJ யுடன் அல்லது குண்டு வெடிப்புடன் சம்பந்தம் இல்லாமல் கைது செய்யப்பட்ட அனவரின் குடும்பத்தினருக்கும் இந்த பதிவை வாசிப்பவர்கள் தயவு செய்து எத்தி வைய்யுங்கல்.

    ReplyDelete
  2. Alhamdu Lillah, i really appreciate your work. don't worry most of children and mothers dua come to you.

    ReplyDelete
  3. This is a good initiative. If any innocent person was taken into custody he must be released. May Allah bless you.

    ReplyDelete

Powered by Blogger.