Header Ads



அரபு எழுத்துக்களை, கண்ணில் காட்ட வேண்டாம் - அரசு கட்டளை

-நஜீப்-

நேற்று 26.05.2019 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இரவு ஒன்பது மணிக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது. அதில் இலங்கையில் அரச கரும மொழி சிங்களம் தமழிலும் அத்துடன் ஆங்கிலத்தையும் மக்கள் உபயோக்கிக்கலாம். 

எக்காரணம் கொண்டு இதன் பின்னர் அரபு மொழியிலான பதாதைகளை பெயர்ப் பலகைகளை இந்த நாட்டில் எந்தப் பகுதிலும் காட்சிக்கு வைக்கக் கூடாது என்று அரசாங்கம் சுற்றுநிருபம் வெளியிட்டிருக்கின்றது என்றும் அந்த செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.

இது அரசாங்க நிருவனங்களுக்கும் தனியார் நிருவனங்களுக்கும் ஏற்புடையதாக இந்த சுற்று நிருபம் அமைகின்றது என்றும் அதில் சொல்லப்பட்டது. எனவே இன்று நாட்டிலுள்ள பள்ளிவாயில்கள், மதரசாக்கள் மற்றும் நிருவனங்கள், வீடுகள் அனைத்திலுமுள்ள இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த அரபு மொழியிலான பதாதைகளை அவற்றைக் காட்சிப்படுத்தி இருக்கின்றவர்கள் தாமாகவே அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்கப்பட்டிருக்கின்கிறது.

மேற் சொன்ன மூன்று மொழிகளில் மட்டுமே இதன் பின்னர் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் கேட்கப்பட்டிருக்கின்றது. ஆனால் வேற்று மொழிகளிலுள்ள பதாதைகள் பற்றி அதில் சொல்லப்படவில்லை. எனவே இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இவற்றை அகற்ற வேண்டி இருக்கின்றது.!

எனவே முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள் அரபு நாடுகளின் தூதுவராலயங்கள் இது பற்றி மேலதிக விளக்கங்களை உடனடியாக பெற்றக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

4 comments:

  1. அரபு மொழி விளம்பரப் பதாதைகலை அகற்றி கொள்வதனால்,Muslim கலாகிய எமக்கு எந்த பிரச்சினயும் இல்லை.ஆனால் கட்டாயம் அனைத்து Muslim தூதுவராலயங்கலுக்கும் நாம் அறிவிக்க வேண்டும்.எனவே அவர்கள் இலவசமாக வழங்கும் ரியாழ்,திர்கம்கலை யும் நிறுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. சாரைப்பாம்புக்கு எதுக்குப்பா மண்ணெண்ணையை காட்டுற

    ReplyDelete
  3. then what about the donations and help coming from Arab countries...??
    Avoid them all...
    Shame on governemnet!!

    ReplyDelete
  4. இலங்கையில் அரபு நாட்டு எம்பசிகளிள் அரபு வார்த்தைகள் கலந்த மொழிகளில் தான் உள்ளது
    எனவே அவர்களும் அரபு வார்த்தையை நீக்கவேண்டும் இல்லையே எம்பசி நாட்டை விட்டு அகற்ற வேண்டும் அதிகார வர்க்கமா?அல்லது இனவாத மோகமா?இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தாலும் நாடு பின்னோக்கி செல்வது என்பது மட்டும் உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.