பயங்கரவாதி ஸஹ்ரான்தான், முதல் தற்கொலை தாக்குதலை நடத்தியவன் - நீதிமன்றில் பொலிசார் தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறன்று ஷங்ரி- லா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் முதல் குண்டை வெடிக்கச் செய்தவர் தேசிய தெளஹீத் ஜமாஅத் எனும் அடிப்படைவாத சிந்தனை கொண்ட அமைப்பின் பயங்கரவாத குழுவுக்கு தலைமை வகித்த மொஹம்மட் ஹாஷிம் மொஹம்மட் ஸஹ்ரான் அல்லது ஸஹ்ரான் ஹாஷிம் அல்லது அஷ்ஷெய்க் ஸஹ்ரான் ஹாஷிம் என்பவரே நடத்தியுள்ளமையை சி.ஐ.டி. விசாரணைகளில் கண்டறிந்துள்ளது.
இது தொடர்பில் நிதிக் குற்ற விசாரணை அறை இலக்கம் ஒன்றின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தரவின் கையெழுத்துடன் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரிகளான இல்ஹாம் மற்றும் ஸஹ்ரான் ஆகியோரின் தலைப்பகுதிகள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் டி.என்.ஏ. பரிசோதனைகளை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஸஹ்ரானின் தங்கையான மொஹம்மட் காசிம் பாத்திமா மதனியா என்பவர் தற்போது மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரைக் கொழும்புக்கு அழைத்து வந்து டி.என்.ஏ. கூறுகளைப் பெற்று உறுதி செய்யவும் நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு அனுமதி வழங்கியுள்ளது.
Post a Comment