இலங்கை முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள், நோர்வே முஸ்லிம்கள் திலக் மாரப்பனோவோடு சந்திப்பு
- Farzan Basir -
நோர்வே வாழ் இலங்கை முஸ்லிம்களின் பிரநிதிகள் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலவரங்கள் தொடாபாக விரிவாக ஆராய்ந்தனர். நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு மற்றும் அதனை தொடர்ந்து முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அத்துமீறல்கள் குறித்து முஸ்லீம் பிரதிநிதிகள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்
சுமார் 2 மணி நேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் சகல மக்களுக்கும் ஒன்றாக இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அரசாங்கம் பல்வேறு பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கும் சர்வேதேச சமூகத்துக்கும் வழங்கிய போதும் இலங்கையில் அப்பாவி முஸ்லிம்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்து வருவதாக சுட்டிக்காட்டினர்
நோர்வே வாழ் இலங்கை முஸ்லிம்களின் சார்பில், அமைப்பின் தலைவர் அனீஸ் ரவூப், பர்சான் பசீர், அஹஷிப் அஹ்மத், அஸ்மில் மக்ஸூட் ஆகியோர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில், கடந்த ஒருமாதகாலமாக முஸ்லிம்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருவதையும், பாதுகாப்பு தரப்பினரால் ஏற்படும் கெடுபிடிகளையும் வெளிநாட்டு மைச்சருக்கு விரிவாக விளங்கியதோடு, இவ்வாரான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில், இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்ற என்னம் ஐரோப்பியர்கள் மனதில் இருந்து விரைவில் நீங்கிவிடும் என்றும் அது சுற்றுலா துறையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் அனைவருக்கும் பொதுவாக நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்தும் மகஜர் ஒன்றை நோர்வே முஸ்லிம்களின் சார்பில் அனீஸ் ரவூப் வெளிநாட்டமைச்சர் மாரப்பனவிடம் கையளித்தார்.
இந்த சந்திப்பில் தொடந்து கருத்து வெளியிட்ட வெளிநாட்டமைச்சர் சகல இனமக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்பதில் தமது அரசு உறுதியாக இருப்பதாகவும் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொழில் துறைகளின் வளர்ச்சிக்காக நோர்வே வாழ் இலங்கையர்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை செய்யவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
செயலூக்கம் மிக்க நோர்வே முஸ்லிம் நண்பர்களின் முயற்சிகளுக்கு என் ஆதரவும் வெற்றிக்கு பிரார்த்தனைகளும். வாழ்த்துக்கள் தோழர்களே.
ReplyDelete