ஏறாவூரில் பதற்றமில்லை, தனிப்பட்ட விடயத்தினால் முஸ்லிம் நபரின் காருக்கு தீ வைப்பு
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியிலுள்ள கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது.
கார் உரிமையாளருக்கு அடிக்கடி வரும் SMS, அவரை மிரட்டுவதாக வந்துள்ளதோடு, சென்ற மாதம் அவரது கார் இன்ஜினுக்குள் சீனி அள்ளிப்போட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இது விடயமாக ஏற்கனவே ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாக கார் உரிமையாளர் தெரிவித்தார்.
நேற்று மாலையும் அவரை பயமுறுத்தும் SMS வந்ததாகவும் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு 12.45 மணியளவில் வீட்டு வாசலில் போடப்பட்ட காருக்குள் வெடிப்பு சத்தம் கேட்டு கதவை திறந்த போது இருவர் ஓடிச் செல்வதை கண்டுள்ளார்.
Mohamed Nasir
#குறிப்பு
விடயத்தை சரியாக விளங்காது சமூகவலைத்தளங்களில் தகவல் பரிமாறுவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.
வதந்தி பரப்புகிறவர்களால் மோதி அழிந்த உறவுகளின் வரலாறுதான் எங்கள் வரலாறு. அது தொடரக்கூடாது.
ReplyDeleteதனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் நள்ளிரவு நேரம்,தற்போது நாட்டில் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் உள்ள நிலையில் இவ்வாறு ஒரு நிலமை.இதில் இருந்து எமக்கு விளங்கிக் கொள்ளலாம் பாதுகாப்பின் பலவீனத்தை
ReplyDeleteIn this current situation, need to do this kind of act....even during Ramadhan...those who acted are Muslims...or bloody buggers?
ReplyDeleteAnimals....