முஸ்லிம் சட்டத்தரணிகளே, சமூகத்துக்கு உதவுவீர்களா...?
இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அவசரகால சட்டம் பிரகடனப் படுத்தப்பட்டு இராணுவத்தினர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை மேற்கொள்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் ஜனநாயக ரீதியான உரிமைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதியான சில ஆலோசனைகள் தெளிவுகள் மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தேவைப்படுகிறது எமது சமூகத்தில் இருக்கின்ற சட்டத்தரணிகள் அவசியமாக செய்ய வேண்டிய சில உதவிகள்
✓அவசரகால சட்டத்தின் கீழ் எந்த விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளது?
✓ஜனநாயக ரீதியான உரிமைகளை எவ்வாறு பாதுகாத்து கொள்ள முடியும்?
✓ஜனநாயக ரீதியான உரிமை மீறல்கள் நடைபெறுகின்றபோது எவ்வாறு நாம் செயல்பட வேண்டும்?
✓எமது உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்காக எந்த தரப்பினரை எவ்வாறு நாம் தொடர்பு கொள்ள வேண்டும்?
✓நாம் வசிக்கின்ற வீட்டில் எவ்வாறான பொருட்களை சட்டரீதியாக வைத்துக் கொள்ள முடியும்?
✓தாம் பின்பற்றுகின்ற மதம் தொடர்பான ஆவணங்களை எந்தெந்த ஆவணங்களை எவ்வாறு வைத்துக் கொள்ளலாம்?
✓பள்ளிவாசல்கள் ஏனைய மத தலங்களை பரிசோதனை செய்கின்ற பாதுகாப்பு படையினர் எவ்வாறான ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும்?
✓போலி ஊடகங்கள் பரப்புகின்ற செய்திகள் எதிராக, எங்கு முறைப்பாடுகள் செய்வது எவ்வாறு சட்ட நடவடிக்கைகள் எடுப்பது?
மேலும் பல்வேறு பட்ட சட்ட ரீதியான உதவிகள் இன்று எமது சமூகத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் தேவைப்படுவதால் எமது சமூகத்தில் காணப்படும் சட்ட வல்லுநர்கள் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து பிராந்திய ரீதியான ஒரு குழுவை அமைத்து இலவசமாக சட்ட ஆலோசனை களையும் உதவிகளையும் எமது சமூகத்திற்கு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்
*இதற்காக பிராந்திய ரீதியான சட்டத்தரணிகள் அனைவரும் ஒன்றிணைந்து வாட்ஸ் அப் குடும்பம் ஒன்றை உருவாக்குதல்
*அந்த whatsapp தொடர்பு மூலம் மக்களால் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு சந்தேகங்களை தெளிவு படுத்துவது சட்டரீதியான ஆலோசனைகளை வழங்குவது
*மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்தல்
மேலும் பல்வேறு உதவிகளை உங்களால் செய்ய முடியும் உங்கள் உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு உங்கள் உதவிக்கரங்களை நீங்கள் இந்த சந்தர்ப்பத்தில் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மருதூர் ஸக்கீ செய்ன்
Post a Comment