ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, எஸ்.பி.திசாநாயக்கா மீண்டும் குற்றச்சாட்டு
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் இன்று -08- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்ததாவது,
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானமொன்றை எடுப்பதற்கு இந்த தகவல்கள் போதுமானது என நான் நினைக்கின்றேன். அவரது சொத்துக்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவர் செய்துள்ள சில குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய ரிஷாட் அலாவ்தீன் எனும் வர்த்தகரை தன்னுடைய கட்சியினுடைய பொருளாளராக வைத்திருந்தமை சிறிய விடயமல்ல. அவருடைய ஒரு மகள் இரண்டு பிள்ளைகளுடன் குண்டு வெடிக்கச் செய்து உயிரிழந்தார். மொஹமட் இப்ராஹிம் எனும் வர்த்தகருடன் அவருக்கும், அவருடைய சகோதர சகோதரிகளுக்கும் உள்ள வர்த்தக தொடர்புகள் போதுமானளவு பேசப்பட்டது. அதேபோல் இப்ராஹிம் குடும்பத்தின் மற்றுமொரு தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமாக இருந்த செப்புத் தொழிற்சாலைக்கு 25,000, 30,000 கிலோகிராம் பித்தளை ரிஷாட் பதியுதீனின் அமைச்சின் ஊடகவே வழங்கப்பட்டுள்ளது. அதனை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். செப்புத் தொழிற்சாலை சார்ந்த தொழில் முயற்சியுடன் ரிஷாதின் சகோதரர்கள் தொடர்புபட்டுள்ளனர். அதன் மூலம் அவர்கள் அதிகளவில் பணத்தை ஈட்டிக்கொண்டனர்.
துருக்கியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்டு செயற்பட்டவர்கள் இங்கு வருகை தந்து கல்வி நிறுவனங்கள், தொழில் பயிற்சி நிலையங்கள், சுற்றுலா நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களை ஸ்தாபித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சுக்கு துருக்கி தூதுவர் அறிவித்திருந்தார். அவர்களுடைய அடையாள அட்டை இலக்கத்திலிருந்து வழங்கியிருந்தார். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் மிகவும் அக்கறையுடன் தேடி வருகின்றார். பாதுகாப்பு அமைச்சு முன்வந்து இதனைத் தேடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பின்னணியிலிருந்து, இவர்களைப் பாதுகாப்பதாக இறுதியாக தெரிவிக்கப்பட்டது. அதனை பிரதமர், ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் பொலிஸ் மா அதிபருக்கு அவர் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இற்றைக்கு சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்புஹேவாஹெட்டையில் இந்த எஸ்.பீ. திசாநாயக்கா 300கோடிக்கும் மேல் செலவழித்து கட்டிய மாளிகைக்கு எங்கிருந்து பணம் வந்த து என்பதை முதலில் புலனாய்வுத்திணைக்களம் தீரவிசாரணைசெய்து அந்த பணம் அரசாங்கத்தின் சொத்து என நிறுவப்பட்டால் அவற்றை மீள திருப்பி திறைசேரியில் ஒப்படைக்கும் வரை இவனைச் சிறையில்வைக்க வேண்டும். இந்த வழக்கைத் தொடர சிறந்த சாட்சியாக முன்னையாநாள் சனாதிபதி சந்திரிகாவை நியமிக்கலாம்.
ReplyDeleteCorruption king, Range.....is talking
ReplyDelete