மீராவோடை, கும்புருமூலை பிரதேசங்களில் கைவிடப்பட்ட ஆயுதங்கள் மீட்பு
நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையையடுத்து நாடலாவிய ரீதியில் சந்தேகத்திற்கிடமான இடங்களை சோதனையிடும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ்.ஜயசுந்தரவின் வழிகாட்டலில் கிராமங்கள் தோரும் தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது இதன்போத நேற்று (புதன்கிழமை) மாலை மீராவோடை கிராமமும் கும்புருமூலை பிரதேசமும் Nடுதல் நடாத்திய போது கைவிடப்பட்ட நிலையில் ஆயுதங்கள் சில இரண்டு கிராமங்களிலும் கண்டெடுக்கப்பட்டள்ளளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.
மீராவோடை பிரதேசத்தில் உள்ள நீரேடைக்கு அருகில் பிளாஸ்டிக் குளாயில் மறைத்து வைத்த நிலையில் ரீ.56ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன்; கும்புறுமூலை முந்திரியம் தோட்டபகுதயில் ரீ.56ரக துப்பாக்கி இரண்டும் (02) கைத்துப்பாக்கி ஒன்று (01) டெட்டனேற்றர் ஒன்பது (09), ஜெலிக்நைட் நான்கு (04) ரீ.56ரக துப்பாக்கி ரவைகள் என்பத்திரெண்டு (82), ரிவோல்வருக்கான ரவைகள் இருபத்திநாலு (24), ரீ.56ரக மெகசின் இரண்டு (02) என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆயுதங்களுடன் தொடர்புடையவர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையி;ல் இவர்கள் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ்.ஜயசுந்தரவின் வழிகாட்டலில் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித் -
Post a Comment