Header Ads



கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழி, பெயர்ப்பாளர் நெளசாட் ஜமால்தீன் ஒரு அப்பாவி..!

(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் - அலகொலதெனிய பகுதியில் தென்னத்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும்  பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்கொலை தககுதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்பட்டு  கைது செய்யப்பட்டுள்ள  தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின்  முக்கியஸ்தர் என கூறப்பட்ட  பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின்  சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரின் கைது தொடர்பில் பல்வேறு  உண்மை நிலை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

கண்டி - அலவத்துகொட, மாவத்துபொல இலக்கம் 60 எனும் முகவரியைக் கொண்ட 42 வயதான மொஹம்மட் நெளசாட் ஜமால்தீன் எனும் குறித்த மொழி பெயர்ப்பாளரைக் கைது செய்யும் போது குருணாகல் பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதன் பின்னர் உளவுத்துறை வெளிப்படுத்திக்கொண்டுள்ள தகவல்களை மையப்படுத்தி இந்த கேள்வி எழுந்துள்ளது. 

இந் நிலையிலேயே பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய  குறித்த  கைது மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலையை  உறுதி செய்ய  குறித்த மொழி பெயர்ப்பாளர் தொடர்பிலான விசாரணைகள் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும்  புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த மொழி பெயர்ப்பாளரிடம்  பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வட மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிரி குணவர்தனவுக்கு கிடைத்த தகவல் விசாரணைகளுக்காக குருணாகல்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. 

அவர் குருணாகல் பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாய்க்கவுக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்ததுடன் குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரியலல் தலைமையிலான குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

அதாவது குருணாகல் - அலகொலதெனிய பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றில்  பயிற்சி முகாம் ஒன்று செயற்படுவதாகவே அந்த தகவல் கிடைத்திருந்தது.  அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த குருணாகல் பொலிஸார் முதலில் மூவரைக் கைது செய்தனர். 

அதில் அந்த தென்னந்தோப்பின் உரிமையாளரும் உள்ளடங்கின்றார்.  ஏனைய இருவரில் ஒருவர் பயிற்சி முகாமின் இணைப்பாளராக செயல்பட்டவர். அவர் தல்கஸ்பிட்டி, அம்பகொட்ட பகுதியைச் சேர்ந்தவர். மற்றையவர்  அந்த முகாமில் வளவாளராக செயற்பட்டவர். அவர் திஹாரி பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் மூவரும் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் விசாரணைகளின் பின்னர்  நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 இந் நிலையில் அந்த பயிற்சி முகாம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்றன.  அந்த விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் குருணாகல் போதன அவைத்தியசாலையின் ஊழியர்.  அவரும் தல்கஸ்பிட்டி, அம்பகொட்டே பகுதியைச் சேர்ந்தவர். மற்றையவர்  ஹாலி எல , அம்பகொட்டே பகுதியைச் சேர்ந்தவர்.  அவரிடமிருந்து பல பெறுமதிகள் குறிப்பிடப்பட்டிருந்த காசோலைகள் கைப்பற்றப்பட்டன.

அவ்விருவரும் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  அவர்களில் குருணாகல் வைத்தியசாலை ஊழியரின் வங்கிக்கணக்குக்கு பல்வேறு நபர்கள் அனுப்பி வைத்துள்ள பெரும் தொகை பணம் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டிருந்தது என ஏற்கனவே பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

 இந் நிலையிலேயே அவர்களுடன் தொடர்பில் இருந்த பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரும் கைது செய்யப்பட்டார்.

 இந்த கைதின் பின்னர் உளவுத்துறை இது குறித்து விஷேட அவதானம் செலுத்தி விசாரித்துள்ளது.

 அதன்படி, உளவுத்துறை முன்னெடுத்த விசாரணைகளில் அலகொலதெனிய தென்னந்தோப்பு பயிற்சி முகாமில் பயங்கரவாத பயிற்சிகளன்றி தலைமைத்துவ பயிற்சிகளே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 பயங்கரவாதி சஹ்ரானின்  சகாக்கள் பலர் சி.ஐ.டி. பிடியிலுள்ள நிலையில், அவர்களிடம் விசாரித்த போதிலும், குருணாகல் - அலகொல தெனிய  பயிற்சி முகாம் ஒன்று இருந்ததாக தெரியவரவில்லை.

 இந் நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ள  உளவுத்துறையின் மேலதிக தேடல்களில்,  பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளர் உள்ளிட்டவர்களால் நடாத்தப்பட்ட தக்வா மன்றம் எனும் அமைப்பு தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டிராத போதும்,  ஆரம்பத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் சிலரால் இந்த அமைப்பு ஸ்தாபிக்ககப்பட்டுள்ளமையும், பின்னர் விதவைகள், ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை செயற்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

 இந்த அமைப்பில் பாராளுமன்றில் சேவைக்கு சேர முன்னரேயே, கைதான மொழி பெயர்ப்பாளர்  உறுப்பினராக இருந்துள்ளமையும், தற்போது அதன் தலைவரக ஏ.எஸ். நிலாம்தீன் எனும் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர் செயற்படுவதும் தெரிய வந்துள்ளது. அந்த அமைப்புக்கு,   இலங்கை வங்கி, சம்பத் வங்கி, நேஷன் ட்ரஷ்ட் வ்ங்கி,  தேசிய சேமிப்பு வங்கிகளில் உள்ள கணக்குகள் ஊடாக பணம் கிடைப்பதும் அவை உள்ளூரில் உள்ள தனவந்தர்களினால் கிடைக்கப் பெற்றுள்ளமையும், அதில் பெரும்பாலோனோர் அவ்வமைப்பின் பழைய மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

 இந் நிலையில் சந்தேக நபர் ராஜகிரியவில் தங்கிருந்த வீடு கூட, அந்த அமைப்புக்காக நேஷன் ட்ரஷ்ட் வங்கியில்  பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.  

ஏற்கனவே கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியசாலை ஊழியரும் அந்த அமைப்பில் உள்ளமையும் அவர்களிடம்  இருந்து மீட்கப்பட்ட  காசோலைகள் கூட அந்த  தக்வா மன்றம் என்ற அமைப்புடன் தொடர்புபட்டது எனவும் உளவுத்துறையினரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 இந் நிலையிலேயே  இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய மேலதிக விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனயவுப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

2 comments:

  1. adhu eapawe therium eagkaluku .jaffna muslim kooda as usual meadia pola than news podurigka adha nipadugka.media ah wa iyagkugka

    ReplyDelete
  2. அப்பாவிகளை கண்டறிந்து அவர்களினூடாக இனவாத ஊடகங்களுக்கு மான நஷ்டஈடு வழக்குத் தொடர இந்த சோனக சமூகத்திற்கு நாதி இருக்குதா?

    ReplyDelete

Powered by Blogger.