இலங்கை முஸ்லிம்கள், உருது மொழியை படிக்க வேண்டும்
இலங்கை முஸ்லிம்கள் அரபு மொழி பேசுவோராக மாற வேண்டும் என்ற முயற்சி முஸ்லிம் சமூகத்தில் துப்பரவாக இல்லை. இஸ்லாம் மார்க்கத்தின் சட்டதிட்டங்களை அறியவே அரபு மொழியை படிக்க வேண்டியுள்ளது.
வைத்திய துறையை கற்கும் மாணவனுக்கு ஆங்கில அறிவு இல்லாவிட்டால் அவனால் ஒரு வைத்தியனாக வர முடிய முடியாது. ஆங்கில அறிவு இல்லாத ஒரு டொக்டரை சிங்கள, தமிழ் சமூகத்தில் காட்ட முடியுமா? அப்படியிருந்தால் அது நகைப்புக்கிடமானதாக இருக்கும். காரணம் அதிகமான வைத்திய அடிப்படைகள் ஆங்கிலத்திலேயே உள்ளன.
அது போல் அரபு மொழி என்பது குர்ஆனின் மொழி. குர் ஆனை புரிய வேண்டுமாயின் அரபு மொழி அறிவு அவசியமாகும்.
இலங்கை முஸ்லிம்கள் சிங்கள மொழிக்கு திரும்ப வேண்டும் என்ற பிரசாரம் சுமார் 40 வருடங்களுக்கு முன்பிருந்தே முன்னெடுக்கப்படுகிறது. இந்த பிரசாரத்தின் கவர்ச்சியால் தென்னிலங்கை முஸ்லிம்களில் பலர் தற்போது தமிழ் பேச முடியாதவர்களாக உள்ளனர். பெற்றோர் தமிழிலும் பிள்ளைகள் சிங்களத்திலும் உரையாடுவோர் அதிகரித்து காணப்படுகின்றனர்.
இவ்வாறு சிங்கள மொழிக்கு மாறுவது மடமை என்றும் அதில் நாம் எதிர் பார்க்கும் பாதுகாப்போ, நலன்களோ கிடைக்காது என்றும் நாம் தொடர்ந்தும் கூறி வருகிறோம். முஸ்லிம் பிள்ளைகள் சிங்கள பாடசாலைகளுக்கு கல்வி கற்க செல்லாமல் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கல்வி கற்க வேண்டும் என்பதை உலமா கட்சி கடந்த ஏழெட்டு வருடமாக சொல்லிவருகிறது. காரணம் தமிழ் கலாசாரம் ஓரளவு முஸ்லிம் கலாசாரத்துக்கு நெருங்கியது என்பதாலும் தமிழ் மொழி உலகின் சில நாடுகளிலும் பாவிக்கப்படும் மொழியாக இருப்பதாலும், இஸ்லாம் சம்பந்தமான நூல்கள் தமிழில் போதியளவு கிடைப்பதாலும், சிங்கள மொழி மூலம் கல்வி கற்றோர் தொழில்வாய்ப்பில் பாரிய போட்டிக்கு முகம் கொடுப்பதாலும் இக்கருத்தை நாம் முன் வைக்கும் அதேவேளை ஒவ்வொரு இலங்கை முஸ்லிமும் சிங்கள மொழியையும் ஆங்கிலத்தையும் கட்டாயம் உப மொழியாக கற்க வேண்டும் என்பதையும் சொல்லி வருகிறோம்.
இலங்கை முஸ்லிம்கள் தனியான இனம் என்பதை சிங்கள சமூகம் ஏற்றுக்கொண்டாலும் தமிழர்கள் பலர் இதனை ஏற்க முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு காரணமாக முஸ்லிம்கள் தமிழ் பேசுவதை சுட்டிக்காட்டி முஸ்லிம்களும் தமிழர் என்கின்றனர். வெளிப்படையில் இது சரியாக தோன்றினாலும் நடை முறையில் முஸ்லிம்களை தமிழர்களாக இலங்கை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஏற்றிருந்தால் தமிழ் போராளிகளாலும் தமிழ் நிர்வாகிகளாலும் முஸ்லிம்கள் தனியாக பிரிக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டிருக்க மாட்டார்கள். வடக்கிலிருந்து தமிழ் மட்டுமே பேசத்தெரிந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டிருக்க மாட்டார்கள்.
அதே போல் முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்க கூடாது, முஸ்லிம் வியாபாரிகள் தமிழ் ஊருக்குள் வரக்கூடாது என்பன போன்ற பிரச்சாரங்கள் இருந்திருக்காது.
இவ்வாறெல்லாம் தமிழ் தரப்பு முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வதை கண்ட பின்பே முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசுவதில் இருந்து விலகி அரபு அல்லது உருது மொழியை பரவலாக கற்க வேண்டும் என கூறி வருகிறோம். உருது மொழி நமது நாட்டுக்கு அருகில் உள்ள வட இந்தியாவினதும் பாகிஸ்தானினதும் மொழியாக இருப்பதால் உருது மொழியையே நாம் இலங்கை முஸ்லிம்களுக்கு சிபாரிசு செய்கின்றோம்.
இவ்வாறு இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மொழியில் இருந்து வெளியேறும் போது முஸ்லிம்களுக்கென தனியான மொழி, பிரதேசம், கலாசாரம் என்பவை இருக்கும் காரணமாக முஸ்லிம்கள் தனியான தேசிய இனம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இக்கருத்துக்கள் உடனடியாக வெற்றிபெறாது. முதலில் முஸ்லிம் சமூகம் இதனை உளப்பூர்வமாக ஏற்க வேண்டும். பின்னர் அட்கற்குரிய வேலைகளை செய்தால் இன்னும் 50 வருடங்களில் இலங்கை முஸ்லிம்கள் உருது மொழியை பரவலாக பேசுவர்.
பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் எதையும் தூரநோக்கில் சிந்திப்பதுமில்லை, அவ்வாறு சிந்திப்பவர்களை உடனடியாக விரும்புவதும் இல்லை. ஒரு நூறு வருடங்களுக்கு முன் ஆங்கிலம் பேசுவது ஹராம் என்று சொன்ன சமூகம் இது. இப்போது ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைக்கும் சமூகமாக மாறியுள்ளது.
எனவேதான் சொல்கிறோம். இலங்கை முஸ்லிம்கள் உருது மொழியை படிக்க வேண்டும். இதற்குரிய உதவியை இலங்கையின் நட்பு நட்பு நாடான பாகிஸ்தான் மூலம் பெற முடியும். முஸ்லிம் அரசியல் அதிகாரங்கள் அதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதற்கான புலமைப்பரிசில்களை வழங்க முன் வர வேண்டும். அத்துடன் தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகியவற்றை உப மொழிகளாக கற்க வேண்டும்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சித்தலைவர்.
Very good
ReplyDeleteசெருப்பு பிஞ்சிரும். எமக்கு எதற்குடா உருது மொழி?
ReplyDeleteDon't know laugh or cry?? Urudu??
ReplyDeleteதமிழ் பயங்கரவாதிகளால் அரபு மொழி காட்சி படுத்தளுக்கு எதிர்ப்பு வருமா இருந்தால் முழு கிழக்கிலும் முஸ்லிம் ஊர்களில் தமிழை தவிர்த்து சிங்கள ஆங்கில மொழிகளிலே பெயர் பலகைகள் வைக்க வேண்டும்
ReplyDeleteஈகோ ஸின்ரம் எனப்படும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த உலமாக்கட்சித்தலைவர், முபாரக், அவருடைய கட்சிக்கு ஒரு அங்கத்தவர்தான், அவர்தான் தலைவர், அங்கத்தவர் அனைவரும் அவர்தான். அதனால்தான் இந்த நாட்டு முஸ் லிம்கள் எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான தருணத்தில் என்ன பேசவேண்டும் எனத்தெரியாத மனநோயாளர் இவருக்கு இப்படி இணையத்தளத்தில் முக்கியத்துவம்கொடுக்கவேண்டாம் என பல தடவை கூறியும் இவை அவற்றைப்பொருட்படுத்துவதில்லை, behind the door deal ஆக இருக்கும் என வாசகர்களாகிய எமக்கு தோன்றுகின்றது.
ReplyDeleteஉண்மையில் இந்த கருத்து சரியானதுதான் . முஸ்லீம் பாடசாலைகளில் மாத்திரமே முஸ்லீம் ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பார்கள். தமிழ் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்கள் மாத்திரம் ,அதேபோல் சிங்கள பாடசாலைகளில் சிங்கள ஆசிரியர்கள் மாத்திரம் இருந்திருப்பார்கள். உடைகள் சம்பந்தமான தேவை அற்ற பிரச்சனைகள் இருந்திருக்க மாட்டாது.
ReplyDelete