Header Ads



கல்முனையில் பதற்றம், இராணுவம் பாதுகாப்பு கடமைகளில்

இன்று -14- மாலை கல்முனையில் முஸ்லிம் ஒருவரை தமிழ் இளைஞர்கள் தாக்கியுள்ளார்கள். இதனால், கல்முனையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தற்போது சுமூகமான நிலை காணப்படுகின்றது.

இச்சம்பவம் பற்றி தொியவருவதாவது,

கல்முனையைச் சேர்ந்த எஸ்.எல்.அறுசுதீன் (வயது 56) என்பவர் கல்முனை பிள்ளையார் (ஆணைக்) கோயில் (ஆர்கேஎம் மகா வித்தியாலய அருகில்) வீதியால் சென்று கொண்டிருந்த போது அங்கு சில இளைஞர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அந்த இளைஞர்கள் எஸ்.எல்.அறுசுதீன் என்பவரை தடுத்து நிறுத்தி, நீ எங்கேடா போகப் போகின்றாய். நீ என்னடா ஜிஹாத்தாடா? உன்னுடைய பைக்கில் குண்டு இருக்கின்றதா என்று மிரட்டிக் கேட்டுள்ளார்கள்.

 இதற்கு அவர் நான் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்போது இதனை அவதானித்தவராக எதிரே கல்முனையை சேர்ந்த இன்னுமொருவர் வந்துள்ளார். அவர் என்னவென்று கேட்டுள்ளார். நான் ஜிஹாத்தாம் என்று சொல்லுராங்கடா தம்பி என்று எஸ்.எல்.அறுசுதீன் தொிவித்து விட்டு சென்றுள்ளார்.

இதன் பின்னர் ஏற்கனவே தடுத்து நிறுத்தி கேள்வி கேட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து டேய்.. என்னடா என்று அதட்டிய போது ஒருவர்  எஸ்.எல்.அறுசுதீனின் தலையில் கையால் அடித்துள்ளார்.

தம்பி நான் நோன்பு எனக்கு ஏன் அடிக்கீங்க என்று சொல்லியுள்ளார். நீ நோன்பு என்பதால்தான் விடுகிறோம். இல்லாவிட்டால் நடக்கிறது வேற. வாங்கடா போவோம். அவர் நோன்பாம் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள்.  

இவர்களின் இந்த காடைத்தனத்தை அவதானித்துக் கொண்டிருந்த சில தமிழ் சகோதரர்கள் நீங்க போங்க என்று சமாதானமாக்கி எஸ்.எல்.அறுசுதீனை அங்கிருந்து அனுப்பியுள்ளார்கள்.

இச்சம்பவம் பற்றி கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கல்முனையில் பெருமளவில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

11 comments:

  1. கிழக்குத் தமிழர்களின் மாண்புகளை கெடுக்கிற வகையில் கல்முணையில் சில இளைஞர்கள் செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சி தருகிறது. தமிழனாய் வெட்கித் தலை குனிந்து கல்முனை முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். கல்முனை தமிழ் தலைவர்களும் சிவில் சமூகமும் உடனடியாக சம்பந்தபட்ட இளைஞர்களை விசாரித்து பாதிக்கப் பட்டவரிடம் மன்னிப்பு கோர வைக்க வேண்டும்.சமரச தீர்வு ஏற்படாவிடின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Allahuakbar பொறுமை செய்யவும் அல்லாஹ்விடம் விட்டுடுங்க அல்லாஹஅருள்புரிவானாக

    ReplyDelete
  3. Allahuakbar பொறுமை செய்யவும் அல்லாஹ்விடம் விட்டுடுங்க அல்லாஹஅருள்புரிவானாக

    ReplyDelete
  4. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது

    ReplyDelete
  5. ஒரு பக்கம் சிங்கள இனவாதம் மற்ற பக்கம் தமிழ் பயங்கரவாதம். முஸ்லிம்களே ஏன் இந்த நிலை நாளை அந்த தமிழ் பயங்கரவாதிகளை கைது செய்து பயங்கரவாத தடைசட்டத்தில் அடைக்கும் வரை கல்முனை பொலிஸ்நிலையத்தை முற்றுகையிடுங்கள்

    ReplyDelete
  6. ஒரு சில நாய்கள் இனப் பிரச்சினைக்கு வித்திட்டு அதில் குளிர் காய நினைக்கிறார்கள் எனவே சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும்.இருக்கின்ற பிரச்சினை யில் இது வேற.

    ReplyDelete
  7. எமது பகுதியில் பிழைப்பு நடாத்தா விட்டால் அவர்களுக்கு வாழ்வது கடினம்.புலிகள் நாட்டை 30 வருடங்களாக ஆட்டிப்படைத்த போது எந்த தமிழனிடமும் நீர் புலியாடா என நாங்கள் கேட்டதில்லை.அனைத்து தமிழர்களும் எம்மிடம்தான் பிழைப்பு நடத்தினார்கள்.ஆனால் எப்போதும் அவர்கள்தான் முதலில் நேரடியாகவோ அல்லது சமூக வலைத்தலத்திலோ எம்மை வம்புக்கிலுப்பது.எமது பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு.இனி எமது பாடசாலைகளில் சாரிக்கு தடை விதியுங்கல்.பிழைப்புக்காக எமது பகுதிக்குள் வரும் அவர்களை விரட்டி அடியுங்கல்.வேறு வழியில்லை ஏனெனில் அவர்களுக்கு இப்போது சண்டை தேவைப்படுகிறது போலும்

    ReplyDelete
  8. இன்று பயங்கர வாதிகள் நல்லவர்கள் போல் பாசாங்கு காட்டுகிறார்கள்

    ReplyDelete
  9. ஜெயபாலன் ஐயா போன்று எல்லாத் தமிழர்களும் சமயோசிதமாக சிந்தித்து செயல்பட்டால் எதிர்கால சந்ததிகளுக்கு நல்லதோர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க முடியும்,
    ஜெயபாலன் ஐயாவுடைய உள்ளம் நேரான பாதையில் நிலைத்திருக்க அல்லாஹ்விடம் கையேந்துவோம்.

    ReplyDelete
  10. எமது இறைவன் அல்லாஹ் தாயை விட பலகோடி மடங்கு இரக்கம் கொண்டவன். அவன் அவனை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் களுக்கு ஏற்படும் துன்பத்தையும், அவனுடைய வீடுகள் உடைக்கப்படுவதையும் , இந்த புனித ரமழான் மாதத்தின் அமல்களுக்கு தடையாய் இருப்பதையும் பார்த்துக் கொண்டு இவர்களை விட்டு சும்மா வைத்திரிக்கின்றான் என்றால்.....

    அது எமக்கு மறுமையில் (நிரந்தரத்தில்) ஏதோ நிரைய கிடைக்க இருக்கின்றது, அவன் எமக்கு தர இருக்கின்ரான் இன்ஸா அல்லாஹ்

    ReplyDelete
  11. I salute you Jayabalan sir.

    ReplyDelete

Powered by Blogger.