Header Ads



இஸ்லாம் தொடர்பான மதத்தீர்ப்புக்களை வழங்க முடியாது என காத்தான்குடியிலுள்ள அதன் கிளை அலுவலகத்திற்கு தடை

மேல் மாகாண ஆளுநர் எம். அசாத்  சாலியின் வேண்டுகோளுக்கு இணங்க, இஸ்லாம் தொடர்பான மதத்தீர்ப்புக்களை வழங்க  முடியாது என காத்தான்குடியிலுள்ள அதன் கிளை அலுவலகத்திற்கு ஒரு உத்தரவை அனைத்து இலங்கை ஜமியத்துல் உலமா சபை வெளியிட்டுள்ளது.

மௌலூத் ஓதுதல், ஹலரா நடத்துதல் மற்றும் அது தொடர்பான ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் நிறுத்தும் படி ஷவியா பள்ளிவாசலிற்கு அனைத்து இலங்கை ஜமியாத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை 08.05.2019 அன்று கட்டளையிட்டுள்ளது.

 மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காகவும், அனைத்து நடவடிக்கைகளையும் ஒரு சீரான தன்மையில் கொண்டு செல்வதற்காகவும் இக்கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக அஸ்செய்க் எம்.எஸ்.எம். தாஸிம் குறிப்பிட்டார்.  

இது தொடர்பான அறிக்கையில் அனைத்து இலங்கை ஜமியாத்துல் உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கையொப்பமிட்டார்.

உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுத்த ஆளுநருக்கு கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி ஆணையாளரும், சமூக ஆர்வலருமான  வைத்தியர் பாமி இஸ்மாயில் நன்றி தெரிவித்தார்.

1 comment:

  1. Chandhula Chindhu paadum Wahhaabi Salafikhal.
    Waangikk kattiyum, ellaarayyum padutthiyum innum Putthi warawillaiyye.

    ReplyDelete

Powered by Blogger.