Header Ads



வெளிநாட்டில் இருந்து மற்றுமொரு, சக்தி செயற்பட்டுக்கொண்டிருகின்றது - ஹக்கீம்

பலரை பலியெடுப்பதற்கான வெடிகுண்டுகளை தயாரித்து அதனை அவர்களின் உடலில் பொருத்தி அதனை செயற்பட வைப்பதற்கான, அதுவும் தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை மிக நேர்த்தியாக செய்து முடிப்பதற்கான சாமர்த்தியம் உள்நாட்டில் இல்லை, அது வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மூலமாகத்தான் நடந்திருக்க வேண்டும் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களின் உதவியுடனேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை எமது புலனாய்வுப் பிரிவினர்கள் நம்புகின்றர். நாமும் அதனை ஓரளவு ஏற்றுக்கொள்கின்றோம். நிச்சயமாக வெளிநாட்டில் இருந்து மற்றுமொரு சக்தி செயற்பட்டுக்கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் எமது நாட்டின் தலைமைகளுக்கு கிடைக்கப்பெற்ற போதிலும் அவர்கள் வெறும் சுற்றரிக்கை மாத்திரம் விடுத்துவிட்டு இருப்பது இன்று விமர்சிக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எங்கட தலைவர் அந்நந்த நேரத்திற்கு மட்டும்தான் வருவார். மற்ற தலைவர்கள்மாதிரி விவஸ்தை இல்லாம கண்ட நேரத்திலும் Site க்கு வரமாட்டார்.

    ReplyDelete
  3. பர்மா பௌத்த தீவிரவாதிகளுக்கும் இலங்கையின் பௌத்த கடும்போக்கு மத இயக்கத்துக்கும் இடையில் நிறைய தொடர்புகள் அண்மைக்காலங்களாக இருந்து வருகின்றன அவை உடனடியாக தடுக்கவேண்டும் இல்லையெனில் மத கலவரமாக இலங்கை நாட்டில் இடம்பெறும்.

    ReplyDelete
  4. சில இனரீதியான அரசியல் கட்சிதலவர்களும்
    இவ்வாறுதான் இருக்கிறார்ளே!அவர்கள் சார்ந்த
    சமூக விடயங்களில்.

    ReplyDelete
  5. மற்றுமொரு சக்தி
    எது என்பதை உரிய
    இடங்களுக்கு தெரிய
    ப்படுத்தலாமே

    ReplyDelete
  6. தோழர் அமைச்சர் ஹக்கீம் கூறுவதுபோல தீவிர வாதைகள் பற்றிய சேதிகள் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு எப்பவோ தெரிந்த விடயம்தான். கொடுமை என்னவென்றால் தேர்தல் காலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை தூண்டி அவர்களைத் தாக்கி அழித்து சிங்கள வீரனாக தேர்தலை எதிர்கொள்ள சில அன்னிய நாடுகளின் ஆதரவோடு ஜனாதிபதி எதிர்கட்ச்சித் தலைவர் என சிங்கள தலைமைகளுக்குள் பெரிய சதி போட்டியே நடந்திருப்பதுதான்.அரசியல் போட்டியில் பயங்கரவாதத்துக்கு இடமழித்துவிட்டு விலையை அனைத்து முஸ்லிம் மக்கள் தலையிலும் கட்டியிருப்பதான் காலத்தின் சோகம்.

    ReplyDelete

Powered by Blogger.