சுயநலவாத, சுதேச முஸ்லிம்களுக்கு...! மன்னிக்கவும், பொதுத்தளத்தில் இதனை பகிர்வதற்கு...!
கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்த என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர், வெகு நாட்களின்பின் இன்று என்னை தொடர்பு கொண்டார். அச்சகோதரர் பேசிய வார்த்தைகள் என்னை தலைகுனிய வைத்ததுடன், கண்கலங்க வைத்தது. அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் என் காதுக்குள் எதிரொலித்து கொண்டிருக்கிறது......
"டேய், ஏன்டா இவங்க எப்படி பண்றாங்க, இவ்வளவு உயிர்கள் போனது இவர்களுக்கு விளையாட்டாய் போச்சா..? நிறைய பேர் ஊனமாகி போய் இருக்கிறாங்க... இன்னும் எத்தனையோ பேர் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறாங்க.... தாய் தந்தையை இழந்து பிள்ளைகளும் , பிள்ளைகளை இழந்து தாய் தந்தையரும், குடும்ப அங்கத்தவர்களை இறந்து உறவுகளும், நொறுங்கிப்போய் இருக்கிறாங்க...
நாங்க இன்னைக்கு இறந்தவர்களுக்காக விரதமிருந்து பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம் , முழு கிறிஸ்தவ சமூகமும் உடைஞ்சி போயிருக்கிறோம்.... ஆனால் இதெல்லாம் உங்க முஸ்லிம்களுக்கு விளையாட்டாய் தெரியுது.
நான் முஸ்லிம்கள் இருக்கிற WhatsApp group களில் இருக்கிறன். அவர்கள் இதை வைத்து விளையாட்டு இருக்கிறாங்க , அவங்க சுய நலன்களை மட்டும் பேசிட்டு இருக்கிறாங்க, இதை எல்லாம் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்குதுடா... முஸ்லிம்கள் இப்படி இருக்கிறாங்க...??"
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நாம் எப்படி பதில் கொடுக்க போகிறோம்???
தெரிந்தோ தெரியாமலோ இந்நிகழ்வுக்கு முஸ்லிம்கள் காரணமாகி விட்டனர், அல்லது காரணமாக்கி விட்டனர் என்றுதான் கூற வேண்டும்.
முழு உலகமும் முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், கிறிஸ்தவ மத பாதிரியார் முஸ்லிம்களுக்கு சார்பாகவே பேசி வருகிறார். முஸ்லிம்களுக்கு எந்தவிதத்திலும் தீங்கு செய்ய வேண்டாம் என்றே கிறித்தவ சமயத்தினரை வேண்டிக் கொண்டுள்ளார்.
ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.....
*பொதுத்தளத்தில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை கேலி செய்து கொண்டிருக்கிறோம். (அனைத்தையும் நியாயம் என்று கூறவில்லை)
*கீழ்த்தரமாக இயக்கங்களின் பெயர்களை வைத்து meems செய்து கொண்டிருக்கிறோம்.
*உயிர்களை இழந்து துக்கம் அனுபவிக்கும் காலத்தில், face cover பறிபோனதற்கு பிரியாவிடை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
*நாட்டில் நடந்த இழப்புக்களை கொஞ்சமும் யோசிக்காமல் சுயநலமாக வேடிக்கை களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
*இது ஒரு பக்கம் இருக்க, online போராளிகள் online இல் சமூக சீர்திருத்தம் செய்கிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் offline போனதுடன் இவர்களது உயரிய பணியும் off ஆகி விடுவதுதான்.
மன்னிக்கவும் சகோதரர்களே... எமது ஒவ்வொரு பகிர்வுக்கு முன்னரும் நாட்டின் நிலையை சிறிது சிந்தித்துப் பாருங்கள். உறவுகளை இழந்து தவிக்கும் ஒரு சமூகத்தை பற்றி சிந்தியுங்கள். மத ஸ்தலம் பாதிக்கப்பட்டும், பொறுமையுடன் செயல்படும் கிறிஸ்தவ சகோதரர்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நம்மில் சில முட்டாள்கள் செய்த தவறால் இந்த நாடும், நாட்டு மக்களும் படும் அவஸ்தைகள் போதும்!!! *இனியும் உணர்வற்ற முறையில், உங்கள் பதிவுகளால் அவர்களை நோகடிக்காதீர்கள்*
*இனியேனும் இஸ்லாமிய அடிப்படையான தேசப்பற்று எனும் அழகான நல்லமலையும், நிய்யத்தையும் மனதில் சுமந்து செயல்படுவோம். இலங்கைத் தாயின் நிம்மதி, நம் ஒன்றினைவிலும் ஒத்துழைப்பிலுமே தங்கியுள்ளது.*
✒ Fazlan A Cader
வெரும் தாடியும் தொப்பியும் மாத்திரமே எங்களிடம் இருக்கிறது. நற்பண்புகளை தொலைத்து விட்டோம். நற்பண்புகள இல்லாத வெரும் செயல்கள் அல்லாஹ் விடம் ஏற்றுக் கொள்ள படுமா?
ReplyDeleteசார் எந்த ஒரு முஸ்லீமும் இந்த சம்பவத்தை விளையாட்டாக எடுக்கவில்லை அப்படி யாரும் இதுவரை சொல்லவும் இல்லை நடந்து கொள்ளவும் இல்லை அப்படி கேலி செய்தால் அவர்கள் முஸ்லீம்கள் இல்லை
ReplyDeleteசார் எந்த ஒரு முஸ்லீமும் இந்த சம்பவத்தை விளையாட்டாக எடுக்கவில்லை அப்படி யாரும் இதுவரை சொல்லவும் இல்லை நடந்து கொள்ளவும் இல்லை அப்படி கேலி செய்தால் அவர்கள் முஸ்லீம்கள் இல்லை
ReplyDeleteUnwanted News.. We Muslims are not like you think.... We worry more about our Mother Country and We Love SriLanka..
ReplyDelete