நாடே பிரதானமானது, எந்த ஒத்துழைப்பையும் வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளோம் - முப்தி றிஸ்வி
அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்துள்ளதுடன், அதன் முதலாவது கூட்டம் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
மகாசங்கத்தினர் உட்பட அனைத்து சமயத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் சிரேஷ்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக உபவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகள் மற்றும் பதில் கடமை பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட நிலைமையை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கு ஒருமாத குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைவரும் ஜனாதிபதி அவர்களுக்கு முதலில் தமது நன்றியைத் தெரிவித்தனர்.
மேலும் அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான தளமொன்றை ஏற்படுத்திக்கொடுத்து இத்தகையதொரு கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்திருப்பதையிட்டு ஜனாதிபதி அவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், இது காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும் என்றும் குறிப்பிட்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தபோதும் உலகில் ஏனைய நாடுகள் இந்த பயங்கரவாத அமைப்பு தொடர்பில் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் படி நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டார்.
இந்த சர்வதேச நிலைமைகளை கருத்திற்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதில் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த சபையை மாதத்திற்கொருமுறை கூட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள், பலவீனங்கள் இருக்குமானால் அதுபற்றி இங்கு கருத்துத் தெரிவிக்க முடியும் என்றும் கருத்துக்கள், முன்மொழிவுகள், பிரச்சினைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கும் இச்சபை திறந்த ஒரு தளமாகும் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடுவதற்கு கடந்த சில தினங்களாக தனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து அவர்கள் அனைவரும் திருப்தியுடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்கேற்ப சுற்றுலா பயணிகளுக்கு சில நாடுகள் விதித்திருக்கும் தடையை விரைவில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிகக் குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவர முடியும் என்றும் சபாநாயகர் நம்பிக்கை வெளியிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை அரசியல் கோணத்தில் நோக்காது அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் இந்த சம்பவங்கள் தொடர்பில் பிரதான ஊடகங்களினதும் சமூக ஊடகங்களினதும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும் என்று கருத்துத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நாட்டின் பாதுகாப்பு துறையின் முழுமையான ஒத்துழைப்பு அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை பாராட்டிப் பேசினார்.
பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தொடர்பிலும் ஆயுதங்கள் உள்ளிட்ட யுத்த உபகரணங்கள் கிடைப்பது தொடர்பிலும் ஆழமாக ஆராய்வதற்கு விரிவான விசாரணைகள் அவசியமாகும் என்று கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகாசங்க சபையின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது இந்த சம்பவங்களின்போது அனைத்து சமயத் தலைவர்களினதும் பொறுப்புக்கள் மிகவும் பாரியது என்றும் நாட்டின் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் அனைவரின் மீதும் விரிவானதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மெளலவி எம்.ஐ.எம்.றிஸ்வி கருத்துத் தெரிவிக்கும்போது அனைவருக்கும் நாடே பிரதானமானது என்றும் நாட்டுக்காக எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆளுநர்களும் இங்கு தமது கருத்துக்களை முன்வைத்தனர். பிரஜைகள் பொலிஸ் பிரிவுக்கு பதிலாக பிரதேச பிரஜைகள் பாதுகாப்பு குழுக்களை பலமாகவும் முறையாகவும் தாபிப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு விரிவான சேவையை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை வௌியிட்டனர்.
இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் விரிவாக கவனம் செலுத்துவாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தேசிய பாதுகாப்பு சபையில் இந்த அனைத்து விடயங்கள் பற்றியும் கலந்துரையாடி முறையானதொரு நிகழ்ச்சித்திட்டத்தினூடாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அசங்க அபேகுணசேகர கருத்துத் தெரிவிக்கும்போது போலியான செய்திகளை தவிர்ப்பது பற்றிய புதிய சட்டங்களை ஆக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்களும் கருத்துத் தெரிவித்ததுடன், இந்த பயங்கரவாத சம்பவங்கள் சர்வதேச பயங்கரவாத நடவடிக்கையாகும் என்பதால் சர்வதேச புலனாய்வுத் துறையின் ஒத்துழைப்பை பெற்று அதன் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தனர்.
நாட்டுக்காக நாம் Panty உடனும் நடமாட தயார்.
ReplyDeleteThe FRUSTATION and AGONY of the Muslims being betrayed by the "Yahapalana Government", followed by more incidents against Muslims in Digana and other areas and attacks on a few Muslim mosques which were smoke screened by Muslim politicians for their personal gains, may have driven some of the the Muslim youth to gather around an EVIL force of destruction that we saw let loose on April Good Friday in our recently peacefull Island. Was there more to this, or was it the "THREACHERY" that the Muslim politicians and Political leaders and ULEMA - failed of politically serving the "ASPIRATIONS and INSPIRATIONS" of the Muslims, especially the "YOUTH", that drove these youth to what they have now ended up with - that it was NOT wealth, position, elite way of living, be politically successfull or the goodies of well-to-do-lives or "RELIGIOUS DECEPTION" but NOT - politically serving the "ASPIRATIONS and INSPIRATIONS" of the Muslim Community since the Muslim political leaders started "TRADING" their vote banks with National Political Parties/Alliances for their selfish needs since the advent of the Sri Lanka Muslim Congress - SLMC in Kattankudy in 1981. On the eve of January 8, 2015 presidential elections, the SLMC and the ACMC joined "Hansaya" camp as they found that the entire Muslim Community had decided to take revenge on Mahinda Rajapaksa. The vote that President Maithripala Sirisena ("Hansaya") got was an Anti-Mahinda vote, "enblock". It was not a pro Maitripala vote, neither was it a vote for Rishad Bathiudeen or Rauf Hakeem or Faizer Musthapa or Mujeebu Rahuman or Marikkar or for the UNP. Even the 20% of Muslim voters who voted Mahinda at the 2010 Presidential Elections and the general elections, voted against Mahinda at the 2015 presidentail and general elections.
ReplyDelete(Contd. below).
(Contd. from above).
ReplyDeleteThe ACJU willingly or unwillingly allows itself to be manipulated by the above Muslim politicians and used as a front for Muslim as well as non-Muslim politicians who seek to achieve their own ends through the ACJU. The incidents of Aluthgama and Beruwela, blamed as violence instigated by the then government via the BBS was to be probed by the "Yahapalana government" when it comes to power - Then 20014/2015. A presidential commission was to be set in motion. THIS DID NOT HAPPEN UP TO NOW.
It is also time-up that The ACJU should declare it's account and reveal the assets immediately and become "Transparent and Accountable" - It may be that the privileges of the RIGHT TO INFORMATION BILL/ACT may induce Anti-Muslim Buddhist clergy and Extreme Nationalist elements, to use the law to probe into the earnings of the ACJU and make them become “TRANSPARENT” in their dealings. The Nationalistic Buldozer rightly has started to roll against the Thawheed Jammath. It will soon start to roll against the All Ceylon Jamiathululema - ACJU."The Muslim Voice" has been calling for the ACJU to declare all it's earnings and be transparent with accountability. "The Muslim Voice" has been calling for this continiously with good faith, but the ACJU has evaded responding.
So what Senior Muslim Journalist Brother Latheef Farook had exposed/written (Political and religious leadership crisis of a Sri Lankan minority - http://www.dailymirror.lk/114191/Political-and-religious-leadership-crisis-of-a-Sri-Lankan-minority- http://www.colombotelegraph.com/index.php/political-bankruptcy-of-sri-lankan-muslims-threaten-communitys-future-countrys-stability/ is nothing that can hurt the Muslim Ulema/ACJU or does the Muslim community bother about it, but indeed should really be happy the the Mighty Truth, TRUTH and nothing but the Truth of these "DECEPTIVE" religious and political institutions and their leaders are exposed to the public, especially to the humble Muslim community WHO ARE LOOKING FOR CHANGE, Alhamdulillah, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
தியாகமும், முழுமையான அர்ப்பணிப்பும் நாக்கு நுனியில் தானா என மக்கள் கேட்கின்றனர்.,
ReplyDelete