நோன்பு மாதத்தில் நிம்மதியற்ற வாழ்க்கை, பல கோடி ரூபா சொத்து இழப்பு - பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கவலை
(ஹஸ்பர் ஏ ஹலீம்)
குருநாகல் மாவட்டம் குளியாபிடிய மற்றும் அதனை அண்டிய புத்தளம் மாவட்டத்தை பொதுவாக வடமேல் மாகாணத்தை தழுவிய பகுதிகளில் குண்டர்கள் முஸ்லிம் இனத்தவர்களின் அவர்களுக்கு சொந்தமான மதஸ்தளங்கள், வியாபார நிலையங்கள், குடியிருப்பு வீடுகள் உட்பட பல சேதங்களை விளைவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
நேற்று (13) அதிகாலை குறித்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக அம் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
கொட்டரமுல்ல பகுதியில் உள்ள பௌசுல் அமீர்டீன் என்பவர் குறித்த தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஜனாசா வீட்டுக்கு சென்று அன்னாரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் தெரிவித்தார்கள்.
இனவாத குண்டர் கூட்டத்தினால் பள்ளிவாயல்கள், அல் குர்ஆன் என்பனவும் தீக்கிரையாக்கப்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி நிருவாக சபையினர் தெரிவிக்கின்றனர்.
அச்ச சூழ் நிலையிலும் நோன்பு மாத காலத்தில் இவ்வாறான இனவாத தாக்குதல் எம்மை நோக்கி நடாத்தியமை தொடர்பில் தாங்கள் நிம்மதியற்ற வாழ்க்கையுடன் வாழ வேண்டியதாகவும் தெரிவிக்கின்றார்கள். பல கோடி ரூபா சொத்துக்களுக்கு சேதங்களை உருவாக்கி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
மெடிகே அனுகன மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாயல், பிங்கிரிய கிண்ணியம ஜூம்ஆ பள்ளிவாயல், ஹெட்டிபொல கொட்டம்பிட்டி மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல், மஸ்ஜிதுல் அல்அம்மர், அல் ஜமாலியா மத்ரஸா, நிக்கப் பிடிய தாருஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயல் போன்ற மதஸ் தலங்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருக்கும் அல் குர்ஆன் உட்பட பல பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு நாசகாரமாக தீமூட்டப்பட்டுள்ளது. இது தவிர ஏனைய இடங்களிலும் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவ இடத்துக்கு மறு நாள் (14) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று மக்களது நிலவரங்களை கேட்டறிந்துள்ளதுடன் குறைகள் தொடர்பில் மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்,இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.
Chase out these polititions, they have been fucking around with others while the incident happening and now they visitign to see an exhibition, these ass holes are those who licking the asses off those polititians.
ReplyDeleteஒவ்வொரு முறையும் இப்படி ஒப்பாரி வைத்துக்கொண்டு இருந்தால் சரி.
ReplyDeleteதனவந்தர்களே, வியாபாரிகளே, கடை உரிமையாளர்களே எப்பொழுது ஒன்று சேரப்போகிறீர்கள்? எப்போது பாதுகாப்பை பலப்படுத்தப்போகிறீர்கள்? சம்பாதிப்பதில் மாத்திரமே உங்கள் எண்ணம் இருந்தது.அந்நியன் அதை ஒரு சில மணித்தியாலங்களில் அழித்தொழித்தான். இன்னமும் பொறுமையா? இல்லை இனிமேலாவது மின்னேற்பாடுகளை செய்து கொள்ளப்போகிறீர்களா? புத்திசாலிகளாக நாம் எப்போது மாறப்போகிறோம்? சட்டத்துக்கு புறம்பான ஆயுதங்களை வைத்திருக்காமல் சட்டதிற்குட்பட்டவற்றை அத்தருணத்தில் ஆயுதமாக மாற்றுவது எப்படி என்பதை சற்று சிந்தியுங்கள்...
அந்நியன் கைகளில் அருவா கத்திகளுக்கு நீண்ட தடிகளைப்பூட்டி கொண்டு வந்திருந்தை நாம் கவனிதோம்...
அண்மையில் ஒரு முஸ்லிம் வர்த்தகர் ஹோட்டலில் பன போட்டுக்கொண்டிருந்ததை நாம் பார்த்தோம்.சிலர் சிங்கலப்பெயர்களை தமது வியாபாரத்தலங்களுக்கு வைக்கிறார்கள். ஏன் நமக்கு ரிஸ்க் தருபவன் அல்லாஹ் என்பதை மறந்து விட்டீர்களா? நமது ஈமானின் வலிமை அவ்வளவுதானா?
அந்நியர்களை பள்ளிகள் அழைத்து பிரித்துள்ளனர்
ஓதுவது , அந்நிய அரசியல்வாதிகளுக்கு பள்ளியில் ஆசி வேண்டி துஆ கேட்பது. இது எல்லாம் எதற்கு?
அல்குர்ஆன் சொல்வதை மறந்துவிட்டீர்களா?
யூதர்களும் ,கிறிஸ்தவர்களும் நீங்கள் அவர்கள் மார்ககத்திற்கு சென்றாலே அன்றி உங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
2:120And never will the Jews or the Christians approve of you until you follow their religion. Say, "Indeed, the guidance of Allah is the [only] guidance." If you were to follow their desires after what has come to you of knowledge, you would have against Allah no protector or helper.
எப்போது இதை உணரப்போகிறோம்?