தலைவரில்லாத பரிதாப நிலைக்கு, முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது - மகிந்த வேதனை
- AAM. Anzir -
தலைவரில்லாத பரிதாப நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளதாக, வேதனை தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் மகிந்த, தம்மால் முடிந்தளவு உதவிகளை செய்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.
முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தலைமையிலான குழுவினருக்கும், மகிந்தவுக்கும் இடையே இன்று சனிக்கிழமை (4) நடைபெற்ற அவசர சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்திகரிப்பதாகவும், இதனால் எல்லா முஸ்லிம்களையும் பெரும்பான்மையின சிங்கள மக்கள் சந்தேகத்துடன் நோக்குவதாகவும் முஸ்லிம் கவுன்சில் சுட்டிகாட்டியுள்ளதுடன், முப்படையினருடைய செயற்பாடகளினால் முஸ்லிம் சமூகம் இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் எடுத்துக்கூறியுள்ளனர்.
முஸ்லிம் கவுன்சிலின் கூற்றுக்களை பொறுமையாக செவிமடுத்த மகிந்த தற்போது ஊடகங்களில் முஸ்லிம்கள் பற்றி வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளை முஸ்லிம் தரப்பு சந்திக்க தாம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் முஸ்லிம் சமூகத்திற்கு தமது ஆதரவு தொடருமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்க்குத்தானே ஆசைப்பட்டாய் மகிந்த குமாரா
ReplyDeleteஊடகங்கள் உண்மையை தான் சொல்லுகின்றன
ReplyDelete26/12/2018 இந்த நாளில் ஆரம்பித்து சுமார் ஒரு 50 நாட்களாக பாராலுமன்றத்தில் இருந்த முஸ்லிம் தலைவர்கள் உங்களின் தவறான சிந்தனைக்கு உதவிசெய்யாத காரணத்தால் நாட்டில் தமிழ் பயங்கரவாத்துடன் இஸ்லாமிய பயங்கரவாதமும் உள்ளது என்று பல இடங்களில் தெரிவித்தீர்கள் மறந்துவிட்டதா?
ReplyDeleteதற்போது அனைத்து முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக காட்டவேண்டிய நிலைமை ஆருக்கோ தேவையானதால் அது அவர்களின் திட்டத்தின்படி தற்போது நன்றாக நடந்தேறுகின்றது அவ்வாறு இருக்கையில் உங்களுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவைபட்டுள்ளது நீங்கள் தற்போது அவர்களுக்கு உதவிசெய்ய முயற்சித்தால் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக பார்கும் சிலர் உங்களுடன் கோபமடைந்து மறுபக்கம் உங்களின் வாக்குபெட்டிகள் குறைந்து விடமே அதை கவனத்தில் எடுக்கவில்லையா?
முஸ்லிம்களுக்கு சில உதவிகளை பாராலுமன்றத்தின் சிறப்புரிமையால் செய்த இஸ்லாமிய தலைவர்களை பயங்கரவாதிகளாக பெரும்பாலான ஊடகங்கள சித்தரிக்கின்றதே அதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்?
கிரீஸ் மனிதர்களை வைத்துக்கொண்டு அப்பாவி முஸ்லிம்களை கொள்ளும்போது பரிதாபம் வரல்லயாம் இப்ப பரிதாபப் படுராரு உங்கள் நடிப்பு போதும் சாமி அப்பாவி முஸ்லிம்களை தயவு செய்து விட்டு விடுங்கள் கோடி புன்னியம் கிடைக்கும் ப்ளீஸ்.....
ReplyDeleteமுஸ்லிம்கள் அச்சமுள்ள, தக்வா உள்ளவர்களாக மாறினாலே போதும், மற்றும் ஏனையவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பாங்கும், கொடுத்து மகிழும் தன்மையும் இருப்பின் கேவலப்படுவதில் இருந்து அல்லாஹ் பாதுகாப்பான்.
ReplyDeleteWe have good leadership
ReplyDeleteWe have a team work
We have a interlecture people.not to worry Mr.rajapakshe.
very sad situation
ReplyDeleteஆடுகள் செத்த்துப்போனாலும் ஓநாய் அவைகளை காப்பாற்றமல் விடாதுபோலும்
ReplyDeleteMr. Opposite leader, we don't depend to anyone. We all know, a planned political game has been started in Sri Lanka to distroy our country peace and economy as well.
ReplyDelete