Header Ads



விமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்


விமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வைத்து விசாரணை நடாத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமான பணியாளர், ஒருவரது முறைப்பாட்டை அடுத்தே இவ்வாறு நடந்துள்ளது.

புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் பெரும்பாலானோர் அல் குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது குறித்த தெளிவு விமான பணியாளர்களுக்கோ கைது செய்தவர்களுக்கோ இல்லாமல் போனதும் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

இனிமேல் எவரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை நாடவேண்டாம் என்று அந்த பாதிக்கப்பட்டவர் வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டிருப்பதும், மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதும் நன்றாக தெரிகிறது.

உலகின் ஏனைய முதல்தர விமான சேவைகளில் பயணிகளுக்கு அல்குர்ஆன் ஒலிப்பதிவுகளை கேட்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளமை பற்றிய தகவல்கள் கூட ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தெரியாமல் போனது துரதிஷ்டமே.

அல்குர்ஆனை ஓதுவதும் சீ ஐ டியினருக்கு சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கையாக இருக்குமாயின் அதற்காக 12 மணித்தியாலயங்கள் தடுத்து வைத்து மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் முஸ்லிம்கள் மீதான இனவெறித் தாக்குதல்களுக்கு துணைபோகும் இனவாத செயற்பாடேயாகும்.

முரசம்

8 comments:

  1. குராஆன் ஓதுவதை யாராலும் தடுக்க முடியாது.ஏற்கெனவே நட்டத்தில் செல்கிறது தற்போது அங்கே வேலை செய்பவர்கலும் இவ்வாறு நடந்து கொண்டால் வெகு விரைவில் இழுத்து மூடிவிடுவார்கல்

    ReplyDelete
  2. Such a chilly and nonsense behaviors by srilankan airlines

    ReplyDelete
  3. It is not Airline's fault, they have to take pre-causions to protect the people because ISIS is also do the prayers before attacking

    ReplyDelete
  4. please do not use sri lankan air lines

    ReplyDelete
  5. எதுக்கு ஸ்ரீ லன்கா விமானத்தில் பயணிக்க வேண்டும்

    ReplyDelete
  6. Evry Refuse srilankan air lines.

    ReplyDelete
  7. Who is the fool using Srilankan Airlines???

    ReplyDelete

Powered by Blogger.