முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பற்றி சில மணி நேரத்துக்கு முன் பாதுகாப்பு தரப்புக்கு அறிவித்தும் அவற்றை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
வடமேல் மாகாணம், மினுவாங்கொடை பகுதியிலும் வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், அவை இடம்பெற சில மணி நேரத்துக்கு முன்பாகவே பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தும் அவற்றை தடுக்க எந்த நடவடிக்கைகளும் அவர்களால் எடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் அந்த வன்முறைகள் தொடர்பில் அவற்றை சீர் செய்ய இன்று வரை உறுதியான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
வன்முறைகள் நடந்த இடங்களுக்கு தாம் நேரில் சென்று தகவல் திரட்டியதாகவும், இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிகமாக அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கிராமத் தலைவர்கள், பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் என பலரிடம் தாம் கருத்து பதிவு செய்ததாகவும் அதிலிருந்தே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலாநிதி தீபிகா உடுகம தனது கடிதத்தில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு சுட்டிக்கடடியுள்ளார்.
23.05.2018 என்ற திகதியிடப்ப்ட்ட குறித்த கடிதத்தில், வடமேல் மாகாணத்தில் பதிவான வன்முறைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் வன்முறையாளர்களுக்கு எதிராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
இந்த பெண்ணுக்கு வேற வேலைவெட்டி ஒண்ணும் இல்லபோல
ReplyDeleteசட்டம் அப்பாவிகளையும் நிரபராதிகளையும்தானே சுத்தி சுத்தி வளைக்கிறது. வன்முறையாளர்களுக்கு ????
ReplyDeleteDate is not correct
ReplyDelete