முஸ்லிம்கள் மீது தாக்குதல்களும், துன்புறுத்தல் சம்பவங்களும் இடம்பெறுகிறது - முப்தி ரிஸ்வி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து முஸ்லிம் சமூகம் மீது இலக்கு வைத்து தாக்குதல்களும் தும்புறுதல் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி M.I.M. ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ஜம்யத்துல் உலமா , முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் விசேட ஊடகவியலார் சந்திப்பு இன்று -09- வியாழக்கிழமை இடம்பெற்று வருகின்றது.
குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்ததாவது,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுஃப் ஹக்கீம், நாடு மெதுவாக இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளபோதும் சில ஊடகங்களால் தேவையற்ற பதற்றம் ஏற்படுத்தப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தற்போது தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளும் இந்த நடவடிக்கையில் அதிகளவிலான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வியடங்களை நேர்மையுடன் வெளிப்படுத்தும் பங்கு ஊடகங்களுக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
If forces don't listen to government, that will be meant as it is getting ready to defeat the government by the same society in the upcoming elections, alike the last government was defeated.
ReplyDelete