கறுப்பு ஆடையணிந்த பயங்கரவாதிகள் குறித்து, நபிகளார் முன்னரே எச்சரித்திருந்தார் - கபீர் ஹாசீம்
கறுப்பு ஆடை அணிந்த அடிப்படைவாதிகளால் ஒரு காலத்தில் இப்படியான அச்சுறுத்தல் ஏற்படும் என முஹம்மது நபிகள் நாயகம் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்துள்ளார் என அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு நேர விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நான் அறிந்த வரை நான் பின்பற்றும் மதத்தை இந்த பயங்கரவாதிகள் பின்பற்றவில்லை. அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் நபர்களாக இருக்க முடியாது. அதுவே எனது நிலைப்பாடு.
திரு குர் ஆனில் ஏனைய சமயங்களை மதிக்க வேண்டும் என்றும் கொலைகளை செய்யக் கூடாது என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பல இடங்களில் இது கூறப்பட்டுள்ளது. குர் ஆனை படிப்பவர் நன்கு அறிந்தவர்கள் இப்படியான செயல்களை செய்ய முடியாது.
அப்பாவி உயிர்களை காவு கொள்ளும் கறுப்பு ஆடை அணிந்தவர்கள் ஒரு காலத்தில் தோன்றுவார்கள் என முஹம்மது நபி அவர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கூறியுள்ளார்.
அத்துடன் 10க்கும் மேற்பட்ட தடவைகள் நபிகள் நாயகம் இதனை போதித்துள்ளார். இது குறித்து கவனமாக இருங்கள் இப்படியான பிரச்சினைகள் ஏற்படும் என்று முஸ்லிம் சமூகத்திற்கு எச்சரித்துள்ளார். எனது இறப்புக்கு பின்னர் கறுப்பு கொடியுடன் வருவார்கள், அவர்களின் இருதயம் இரும்பாக இருக்கும்.
அனைவரும் இளைஞர்களாக இருப்பார்கள். அவர்களின் பேச்சுக்கள் ஈர்க்க கூடிய வகையில் இருக்கும். எனினும் அவர்கள் இஸ்லாத்திற்கு விரோதமான காரியங்களை செய்வார்கள் என முஹம்மது நபி கூறியுள்ளார்.
எமது சமயத்துடன் தொடர்புடைய நபர்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை. இஸ்லாம் மற்றவர்களை கொலை செய்வதை கடுமையாக எதிர்க்கின்றது. இந்த பயங்கரவாத குழுவை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாதிகளுடன் முஸ்லிம் மக்களை ஒப்பிடக் கூடாது. முஸ்லிம் மக்களே பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் உதவி வருகின்றனர் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.
துவேசத்தை கக்கி முஸ்லீம்களை பிற இனத்திடம் இருந்து தூரமாக்கும் NGK போன்றவர்களை பற்றியும் கூறப்பட்டுள்ளதா?
ReplyDelete