Header Ads



அப்துல் ராசிக்கை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர் போர்க்கொடி

அடிப்படைவாத அமைப்புகளுக்கு தலைமைத்துவம் வழங்கும் சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராஸிக் ஐ உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடக சந்திப்பில் அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குத் தலைமைத்துவம் வழங்கிய சஹ்ரான் 2013 ஆம் ஆண்டே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தான் தகவல் வழங்கியதாகவும், எனினும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாதிகளை சரியான முறையில் அடையாளம் கண்டு, அவர்களைக் கட்டுப்படுத்தி, நாட்டிலுள்ள பாரம்பரிய முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டும்.

இந்த விடயத்தில் எவரும் போட்டியை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என ஞானசார தேரர் கூறியுள்ளார்.

6 comments:

  1. அன்மையில் தாக்கப்பட்ட மூனு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் நீங்கள் கூறும் பாரம்பரிய Muslim களே.எங்கே நீங்கள் அவர்களை பாதுகாத்தீர்கல்

    ReplyDelete
  2. Now start ur troube.....txs for presidnt..

    ReplyDelete
  3. அல்லாஹ்வே நீயே போதுமானவன்..
    குறைக்க ஆரம்பித்து விட்டான்..

    ReplyDelete
  4. சபாஷ் ஒரு முஸ்லிமையும் விடாதே சிறையிலிர்ந்து வெளியே வந்ததிற்கு பிரயோசனம் வேண்டடுமே

    ReplyDelete
  5. இலங்கையில், மரபுரீதியான முஸ்லிம்களும் & இஸ்லாமிய இயக்கங்களும் :-

    இஸ்லாமிய இயக்கங்கள் :-

    {1} 1926 ம் ஆண்டு மே மாத்தில் ஆரம்பித்து 1952 ம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இல்யாஸி தப்லீக் ஜமாஅத்.....

    {2} அதே போல் 1946 ம் ஆண்டு இலங்கைக்கு அறிமுகமாகி 1980 ம் ஆண்டுக்கு பின் TNTJ, SLTJ, ACTJ, NTJ, UTJ ஆக பரிணாமமெடுத்த வேஷதாரிகளான தவ்ஹீத் ஜமாஅத் என்ற வஹ்ஹாபிகள்....

    {3} அதே போல் அபுல் அஃலல் மௌதூதி சாஹிபால் 1941 ம் ஆண்டு லாஹுரில் ஆரம்பிக்கப்பட்டு 1980 கு பின் இலங்கைக்கு இறக்குமதியான ஜமாஅத்தே இஸ்லாமி.....

    {4} அதே போல் ஹஸனுல் பன்னா வினால் 1928 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1980 க்கு பின் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன்......

    மரபுரீதியான முஸ்லிம்கள் :-

    றஸூலுல்லாஹ்ஹுவின் மறைவு கி.பி. 633.

    இலங்கையில், இயக்கங்கள் ரீதியிலான இஸ்லாம் தோன்றியது கி.பி. 1926 என வைத்துக்கொள்வோம்.

    எனவே, இலங்கையில், 633 க்கும் 1926 க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் (1926-633) = 1293 வருடங்கள்.

    ஆகவே, இலங்கையில், றஸூலுல்லாஹ்ஹுவின் மறைவை தொடர்ந்து வந்த 1293 வருட காலமாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் மரபுரீதியான முஸ்லிம்கள்.

    இதர்க்கான ஓர் உதாரணம்,

    சுமார் 419 வருடங்களுக்கு முன்னர் கி.பி. 1600 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களின் முதல் குடியேற்றம் இலங்கையின் கருங்கொடித்தீவு (அக்கரைப்பற்று) ஊரில் நிகழ்ந்துள்ளது.

    குடியேற்றம் நடைபெற்ற உடனேயே அம்மக்கள் தங்களது வணக்க வழிபாடுகளுக்காக கம்புகளையும், கிடுகுகளையும் கொண்டு ஒரு பள்ளியை தமது வசிப்பிடங்களுக்கு மத்தியில் அமைத்தார்கள் அதுவே இன்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகின்றது.

    அப்படியாயின் அப்பள்ளிவாசலை ஆரம்பித்தவகள் எந்த இஸ்லாமிய இயக்கத்தையும் சேர்ந்த்வர்களும் அல்லர்.
    அவர்கள்தான் மரபுவழி இஸ்லாமியர்கள்.

    ReplyDelete
  6. The released dog had begun to bark coming out of cell.

    ReplyDelete

Powered by Blogger.