முஸ்லிம் அரசியல்வாதிகளை விசாரணைசெய்ய, அரசாங்கம் பயப்படுவதாக குற்றச்சாட்டு
தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க அரசாங்கத்துக்கு உதவவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரட்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்
எனினும் அரசாங்கத்தின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதும் கூட நாட்டில் சமாதானத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்படவில்லை.
அவர்கள், தமது வாக்குகளை பாதுகாக்கவே பாடுபடுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை சம்பவங்களுடன் தொடர்புடைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்ய அரசாங்கம் பயப்படுகிறது.
இதற்கு காரணம் தமது வாக்குகளில் குறைவு ஏற்பட்டு விடும் என்ற பயமேயாகும் என்றும் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேவையற்ற அரசியல் பேசி மக்களைக் குழப்பியடிக்கின்றான்.
ReplyDeleteYour and your group newer come to the power.insha allah
ReplyDelete