வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள், குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சருக்கு இடமாற்றம்
வன்முறைகளை கட்டுப்படுத்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போது பேச்சாளர் இதுதொடர்பாக தெரிவித்தார்.
வன்முறைகள் தொடரப்பில் தகவல்கள் கிடைத்ததும் அந்தப் பிரதேசங்களுக்கு உடனடியாக ஹெலிகொப்டர்களை அனுப்பி வன்முறையாளர்கள் தொடர்பான காட்சிகளை வானிலிருந்தவாரே பதியவும் ஹெலி மூலம் துருப்புக்களை இறக்கி நிலைமையை கட்டுப்படுத்தவும் விமானப் படைத் தளபதி தீர்மானித்துள்ளதாக கூறினார்.
2
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், நுகேகொட பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Post a Comment