Header Ads



முஸ்லிம் பிர­தே­சங்­களில் தொடர்ந்தும் அச்­ச­நிலை, பள்ளிவாசல்களை புனரமைக்க பெருமளவு பணம் தேவை

இன­வாத கும்­பல்­க­ளினால் தாக்­கு­த­லுக்­குள்­ளான மற்றும் தாக்­குதல் நடத்­தப்­ப­டலாம் என சந்­தே­கிக்­கப்­படும் முஸ்லிம் கிரா­மங்­களில் தொடர்ந்தும் அச்­ச­மான நிலைமை காணப்­ப­டு­கின்­றது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தேவா­ல­யங்கள் மற்றும் நட­சத்­திர ஹோட்­டல்­களில் தற்­கொலை தாக்­கு­தல்­தா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்டில் இயல்­பு­நிலை மோச­ம­டைந்­தது. இந்­நி­லையில், கடந்த 10 நாட்­க­ளுக்குள் நீர்­கொழும்பு, கொட்­டா­ர­முல்லை, சிலாபம், மினு­வாங்­கொடை மற்றும் குரு­நாகல் மாவட்­டத்தின் பல பகு­தி­க­ளிலும் இன­வா­திகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விட்­டி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து முஸ்லிம் கிரா­மங்­களில் அச்­ச­மா­ன­தொரு சூழ்­நிலை தோன்­றி­யுள்­ளது.

கினி­யம பிர­தேசம்

பிங்­கி­ரிய பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கினி­யம பகு­தியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இன­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களின் பின்பு ஏதும் அசம்­பா­வி­தங்கள் நிக­ழா­விட்­டாலும் அப்­ப­கு­தி­மக்கள் தொடர்ந்தும் பீதியில் வாழ்­வ­தாக கினி­யம தக்வா ஜும்ஆ பள்­ளி­வா­சலின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம். சித்தீக் தெரி­வித்தார்.

வன்­முறைத் தாக்­கு­தல்­களின் பின்பு கினி­யம பிர­தே­சத்தின் தற்­போ­தைய நிலைமை தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘இப்­ப­கு­தியில் தொடரும் அச்ச நிலை கார­ண­மாக கடந்த 13 ஆம் திக­தியும் சில குடும்­பங்­களைச் சேர்ந்த மக்கள் இரவு நேரத்தை காடு­க­ளிலே கழித்­தார்கள். இப்­ப­கு­தியில் 3 பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்டு சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. அதனால் தொழுகை நடத்த முடி­யாமல் மூடி வைக்­கப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வா­சல்­களின் பாது­காப்­பிற்­காக 6 விமானப் படை வீரர்கள் வீதம் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். பாதை­களில் முக்­கிய இடங்­களில் படை வீரர்கள் கட­மையில் இருப்­ப­துடன் ரோந்துச் சேவையும் இடம்­பெ­று­கி­றது. பள்­ளி­வா­சல்­களைப் புன­ர­மைப்­ப­தற்கு பெருந்­தொகைப் பணம் தேவைப்­ப­டு­கி­றது. இப்­ப­குதி மக்­களில் 90 வீத­மானோர் வறி­ய­வர்கள். எனவே பள்­ளி­வா­சல்­களை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்கு சமூ­கத்­தி­லுள்ள வசதி படைத்­த­வர்கள் உதவி செய்ய வேண்டும்’ என்றார்.

vidivelli

1 comment:

  1. எல்லா கடைகள், பள்ளிக்ஃள், வீடுகள் அனைத்திற்குமான புணரமைப்பு செலவுகளை அரசாங்கம் பொருப்பேற்க வேண்டும், இல்லையேல் வழக்கு ப் போ டு ங் கள்.

    ReplyDelete

Powered by Blogger.