முஸ்லிம் பெண்கள் பலர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு - எதற்காகத் தெரியுமா..?
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அடிப்படைவாத நடவடிக்கையினால் தமது அடிப்படை உரிமைகள் பல இழக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து முஸ்லிம் பெண்கள் பலர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாம் இலங்கையின் மக்களின் பழக்க வழக்கங்களை மதித்து வாழ்வதற்கு விரும்பம் எனவும், அடிப்படைவாதத்தை மறுப்பதாகவும் அவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வட்டாரங்களை மேற்கோள்காட்டி இன்றைய சகோதர வார இதழொான்று அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21 இன் பின்னர் நாட்டிலுள்ள முஸ்லிம் பெண்கள் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை குறித்து பேசுவதற்கு அதிக ஆர்வம்காட்டி வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி என்.டீ. உடுகம தெரிவித்துள்ளார்.
இது ஆரோக்கியமான ஒரு நிலைமை எனவும், இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் இன, மத பேதங்களுக்கு அப்பால், வாழ்வதற்கான உரிமை உள்ளது எனவும், தனது இனத்தினாலோ அல்லது மதத்துக்குள்ளோ தனக்குள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக இருந்தால், அது தொடர்பில் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த கருத்து மாற்றம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் கலாநிதி என்.டீ. உடுகம தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. DC
Post a Comment