மோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே கெட்ட செய்தி - அமெரிக்க இங்கிலாந்து பத்திரிகைகள் தாக்குதல்
தனிப்பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராவது இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே கெட்ட செய்தி என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கை கார்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கி விட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் விமர்சித்துள்ளது. இந்திய தேர்தல் முடிவுகள் பற்றி கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தலையங்கத்தில் மிகப்பெரிய தேர்தலில் நரேந்திர மோடி என்ற தனி மனிதர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த போதும் அவர் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே மோசமான செய்தி என்று கார்டியன் பத்திரிக்கை எச்சரித்துள்ளது. இந்து தேசியவாதம் என்ற பெயரில் நாட்டை மோசமான பாதைக்கு அழைத்து செல்லும் இயக்கத்தின் அரசியல் பிரிவே பாரதிய ஜனதா கட்சி என்று கார்டியன் விமர்சித்துள்ளது.
இந்து உயர் சாதியினர் ஆதிக்கம், பெரு முதலாளிகளிக்கு ஆதரவு, வெறுப்பு அரசியல், மாநில அரசு அதிகாரங்களை கட்டுப்படுத்துதல் போன்றவை பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு என்றும் கார்டியன் எச்சரித்துள்ளது. மோடியின் பெருவாரியான வெற்றியின் மூலம் சுமார் 20 கோடி இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதும் இருண்ட அரசியலிடம் இந்தியாவின் ஆன்மா தோற்றுவிட்டதாக அந்த பத்திரிக்கை கூறியுள்ளது. மோடி சிறந்த பிரச்சாகர் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ள கார்டியன், பொய் தகவல்கள் மற்றும் பிரிவினை வாதத்தை வைத்து மோடி பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
இதே போல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும் மோடியின் வெற்றியை கடுமையாக விமர்சித்துள்ளது. பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கிவிட்டார் என்று நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. தி கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகள் உலகளவில் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றவை ஆகும். இவை இரண்டுமே மோடி வெற்றி குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Do all the muslims still believe on Western medias and their tears,,,
ReplyDeleteRSS பயங்கரவாதிகளின் தலைவன் மோடி. இன்றும் 05 வருடந்தில் இந்தியா சோமாலியாவாக மாறினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை
ReplyDeleteஇந்திய சோமாலியாவாக மாற அங்கு Al-Shabaab போன்ற பயங்கரவாத குழுக்கள் இல்லை.
ReplyDeleteKumar இந்தியா சோமாலியாவை விட மோசமாக அங்கிருக்கும் கல்வியறிவற்ற ஹிந்து பயங்கரவாதிகள் போதும். இன்னும் அங்கு ஒழுங்காக பேல மலசலகூடங்கள் கூட இல்லாத ஒரு பிச்சைக்கார நாடுதான் இந்தியா
ReplyDelete@Money Making: Because you scumbags are posting articles against Hindus and Tamils.
ReplyDelete@ NGK : இந்துக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் , நீங்களெல்லாம் படித்து கிழித்தவர்கள் .உங்கள் சமூகத்தில் படித்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று அண்மையில் பார்த்தோமே !. அழிவை தவிர எதுவுமே உருப்படியாக செய்ய முடியாது .
ReplyDelete