பணம் தரவேண்டியவர் பட்டியலை மனைவிக்கு அனுப்பி, இறைவனிடம் செல்வதாக விடைபெற்ற தற்கொலைதாரி
“ நான் இறைவனிடம் செல்கிறேன் “ என்று கூறி தனது மனைவிக்கு கடைசியாக வொய்ஸ் மெஸேஜ் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார் தெமட்டகொட வர்த்தகர் இப்ராஹீமின் மகனும் நட்சத்திர ஹோட்டல் தற்கொலைதாரிகளில் ஒருவருமான இன்சாவ் இப்ராஹீம்.
அமெரிக்க விசாரணையாளர்கள் உதவியுடன் இன்சாவ் இறுதியாக மனைவிக்கு அனுப்பிய குரல்பதிவுச் செய்தி மீட்கப்பட்டுள்ளது.
அதில் – பணம் தரவேண்டியவர்கள் பெயர்களை பட்டியலிட்டு அவர்களிடம் பணத்தை கேட்டுப் பெறுமாறு மனைவியை அறிவுறுத்தும் இன்சாவ் , வீட்டில் இருக்கும் இரண்டு கார்களில் ஒன்றை விற்றுவிடுமாறு சொல்லியிருப்பதாக தகவல்.
அந்த வொய்ஸ் மெசேஜின் இறுதியில் எதற்கும் மனம் கலங்கக் கூடாதென மனைவியை தேற்றும் இன்சாவ் , “ நான் இறைவனிடம் செல்கிறேன்..” என்று கூறியுள்ளார்.
சஹ்ரானுக்கு உதவிய இப்ராஹீமின் புதல்வர்கள் !
சஹ்ரானின் பேச்சால் கவரப்பட்ட இப்ராஹீம் ஹாஜியாரின் மகன்மார் சஹ்ரானின் அனைத்து தேவைகளுக்கும் உதவி புரிந்துள்ளதை விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
2017 இல் சஹ்ரானின் தம்பி வெடிமருந்து பரிசோதனை ஒன்றை செய்ய முற்பட்டபோது விபத்துக்குள்ளானார். அவரை மேல் மாகாணத்தின் ஒரு வைத்தியசாலையில் வைத்து பராமரித்துள்ள இவர்கள் அது ஒரு விபத்தென டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மருத்துவர்கள் தெரிந்தே சிகிச்சை வழங்கியிருக்கலாமென கருதும் விசாரணையாளர்கள் அவர்களை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு சக்தி !
நீர்கொழும்பு சென் செபஸ்தியான் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய அச்சி மொஹம்மத் மொஹம்மத் ஹஸ்தூன் என்பவரின் கணனியில் இருந்து, குண்டுகளை தயாரிப்பது தொடர்பான ஆவணங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்தி கொழும்பை அண்மித்த கராஜ் ஒன்றில் வைத்து குண்டை தயாரித்த ஹஸ்தூன் துருக்கியில் இதற்கான பயிற்சிகளை பெற்றிருக்கலாமென விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.
பாரிஸில் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட உத்தி இங்கேயும் பின்பற்றப்பட்டுள்ளதால் , இந்த உள்நாட்டு தாக்குதல்தாரிகளுடன் ஒரு வெளிநாட்டு சக்தி நேரடித் தொடர்பில் இருந்துள்ளதை பொலிஸார் விசாரணைகளில் அறிந்துள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சஹ்ரானின் வலது கையாக செயற்பட்ட சாதிக் என்பவர் அடிக்கடி வெளிநாடு சென்றுவந்தவர் என்றும் சிரியாவுக்கு அவர் பல தடவைகள் சென்றுள்ளதால் அவரே ஐ எஸ் இயக்கத்துக்கு இடையில் இடைத்தரகராக செயற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
குண்டுகளை தயாரித்தாலும் , அதை எப்போது எந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தலாம் , எந்த இடத்தில் பயன்படுத்தினால் அதிகம் சேதம் வரும், தற்கொலைதாரி செயற்படவேண்டிய விதம் என்பனவற்றை நேரடியாக ஒருவர் பயிற்சி வழங்கியிருக்கலாமென பொலிஸ் மேலும் கருதுகிறது. tamilan
சொந்த,பந்தங்கள் அல்லது ஊர் ஜமாத்தார் சேர்ந்து இந்த மேலே புகைப்படத்தில் உள்ள மன நோயால் பாதிக்கப்பட்ட கூட்டத்தை பிடித்து வைத்தியசாலைக்கு அனுப்பியிருந்தால்,இப்படியான ஆபத்துக்களை முன்கூட்டியே தடுத்திருக்கலாம்.இனியாவது எதிர்காலத்தில் அனைவரும் சாய்ந்தமருது மக்கள் போல அதிக கவனத்துடன் இருக்கவும்.
ReplyDeleteWell Said Brother Rizard.. In this case we made mistake... We ignored these dangerous Mental Sick people without noticed.
ReplyDelete