Header Ads



வெசாக்கின் போது ஞானசாரரை விடுவிக்காவிட்டால், வீதியில் இறங்கி போராடப் போகிறோம்

வெசாக் பண்டிகையின்போது பொதுபலசேனா அமைப்பின பொதுச்செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பொதுபலசேனா, அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை அணத்திரட்டி வீதி போராட்டத்தை முன்னெக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

பிரச்சினையை ஏற்படுத்தி ஞானசார தேரரை விடுதலை செய்ய வைப்பது எமது எதிர்ப்பார்ப்பல்ல. ஆனால் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக அவரின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனவும் பொதுபலசேனா குறிப்பிட்டது.

இன்று ராஜகிரியவில் பொதுபல சேனாவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இதனை குறிப்பிட்டார்.

1 comment:

  1. அவசரகால தடை ச் சட்டத்தின் கீழ் இவர்களது இந்த அறிக்கைக்கு எதிராக இவர்களை ஏன் கைது செய்யவில்லை.?
    இதனையே ஒரு முஸ்லிம் இயக்க‌ம் கருத்து வெளியிட்டால் உடனே அநியாயம் தன் கடமையை செய்யும். துவேசமும் பாரபட்சமும் இன்னும் சரிவராது.

    ReplyDelete

Powered by Blogger.