விகாரை ஒன்றை தாக்கி, முஸ்லிம்கள் மீது பழிபோட திட்டம் - எச்சரிக்கிறார் ஆசாத் சாலி
பௌத்த விகாரையொன்றை தாக்கி முஸ்லிம்கள் மீது பழிபோட திட்டமிடப்படுள்ளமை குறித்து, முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்தார்.
அவர் இதகுறித்து மேலும் கூறியதாவது,
பௌத்த விகாரையொன்றை தாக்கி முஸ்லிம்கள் மீது பழிபோடவும் அதன்மூலம் முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்க்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இதனால்தான் 50 விகாரைகளை தாக்க திட்டமிட்டிருப்பதாக ஞானசார கூறினார். முடிந்ததால் ஒரு விகாரையையாவது தாக்கிக்காட்டுங்கள் என பொதுபல சேனா குறிப்பிட்டுள்ளது.
இநநிலையில் முஸ்லிம்கள் நிதானமாகவும், விழிப்பாகவும் செயற்படுவது முக்கியமானது என்றார் ஆசாத் சாலி
Hon. Governor, please convey this message to the government and the defence minister...
ReplyDelete