தற்கொலை குண்டுதாரிக்காக பிரார்த்தனை செய்ய சென்ற, மெளலவி உட்பட ஐவர் கைது
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி உட்பட ஐவர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இன்று மாலை கொள்ளுபிட்டியில் உள்ள மொஹம்மட் இப்ராஹீம் அன்ஷாப் அஹமட்டின் மனைவின் வீட்டில் வைத்து அவர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்.
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த மெளலவி ஒருவரும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த மேலும் நால்வருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து முச்சக்கர வண்டியொன்றையும் வீட்டில் இருந்து ட்ரோனர் கமரா ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவனே ஒரு காபிராய் செத்துப்போனான்.இந்த முட்டாள்கள் அவனுக்கு சமய சடங்கு பன்னுகிரானுகல் இது உன்மையான சம்பவமாக இருந்தால் ஒரு 10 வருடத்துக்கு கட்டாயம் உள்ளே வைக்க வேண்டும்.
ReplyDeleteYes, if this message is true, than they also must be arrested and remanded in accordance with spring or remembering barbaric terrorists. There is no place for such people in this country or in any relief. Specially in Islam
ReplyDeleteBrother Rizard don't say "kafer" word for human beings.. because almighty Allah only have the right to decide whether he is a "kafer" or not ...
ReplyDeleteErumai maadukal
ReplyDelete