Header Ads



அப்பாவி முஸ்­லிம்­க­ளை விடுவிக்க, விரைந்து செயற்படுங்கள்

நாட்டில் பர­வ­லாக முன்­னெ­டுக்­கப்­படும் தேடுதல் மற்றும் சோதனை நட­வ­டிக்­கை­களின் போது முஸ்­லிம்­க­ளுக்கு சில அசௌ­க­ரி­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வது தொடர்பில் பல்­வேறு முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக சோதனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது பள்­ளி­வா­சல்கள், புனித அல்­குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிரந்­தங்கள் என­ப­ன­வற்றின் கண்­ணி­யத்­திற்கு பங்கம் விளை­விக்கும் சில சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

இது தொடர்பில் நாட­ளா­விய ரீதியில் முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­ற­தை­ய­டுத்து இது குறித்து ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அத்­துடன் பொலிஸ் மற்றும் இரா­ணுவ உய­ர­தி­கா­ரி­க­ளி­டமும் முஸ்லிம் சமூ­கத்தின் கவ­லைகள் குறித்து தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து தற்­போது இடம்­பெறும் சோதனை நட­வ­டிக்­கை­களின் போது படை­யினர் நாக­ரி­க­மாக நடந்து கொள்­வ­தாக அறிய முடி­கின்­றது. அத்­துடன் பொது மக்­க­ளது வீடு­களில் சோதனை நட­வ­டிக்­கை­க­ளுக்குச் செல்லும்  போது ஊட­கங்­களை அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

இவை ஒரு­பு­ற­மி­ருக்க ஹிஜாப் அணிந்து செல்லும் பெண்கள் பொது மற்றும் தனியார் கட்­டி­டங்­களில் நுழைய முடி­யா­த­வாறு வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வங்­களும் பதி­வா­கின. இத­னை­ய­டுத்து ஹிஜாப் மற்றம் நிகாப்,புர்கா தொடர்­பான வரை­ப­டங்­க­ளுடன் கூடிய விளக்க சுற்­று­நி­ரு­பங்கள் அரச அலு­வ­ல­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும் அவி­சா­வளை, புவக்­பிட்­டிய தமிழ் பாட­சாலை ஒன்றில் கற்­பித்த 10 முஸ்லிம் ஆசி­ரி­யைகள் ஹிஜாப் அணிந்து கற்­பித்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட அப் பாட­சா­லையின் நிர்­வா­கமும் பெற்­றோரும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர். இத­னை­ய­டுத்து குறித்த ஆசி­ரி­யை­க­ளுக்கு உடன் இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் மேலும் தொட­ரு­மாயின் இது இலங்­கையின் கல்வித் துறைக்கு பாரிய பின்­ன­டை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தும்.

இதற்­கப்பால் முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டிய விடயம் ஒன்­றுள்­ளது. அதுதான் சோதனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது ஏரா­ள­மான முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இது­வரை எத்­த­னைபேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என்ற சரி­யான புள்­ளி­வி­ப­ரங்­களை பொலிசார் வெளி­யி­ட­வில்லை. எனினும் கைது செய்­யப்­பட்­டோரில் அதி­க­மானோர் பயங்­க­ர­வாத செயல்­க­ளுடன் எந்­த­வி­தத்­திலும் தொடர்­பற்­ற­வர்கள் என்றே நம்­பப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக கடந்த காலங்­களில் ஐ.எஸ். பயங்­க­ர­வாத இயக்­கத்­திற்கு எதி­ராக பகி­ரங்க தளத்தில் எழு­தியும் செயற்­பட்டும் வந்­த­வர்கள் கூட கைது செய்­யப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இவ்­வா­றான செயற்­பாட்­டா­ளர்­களுள் ஒரு­வ­ரான புத்­த­ளத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சின் உய­ர­தி­காரி ஒரு­வரும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது முஸ்­லிம்­களை அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது. அதே­போன்று தமது கைய­டக்க தொலை­பே­சியில் தீவி­ர­வா­தத்­துடன் சம்­பந்­தப்­ப­டாத பயான்­களை வைத்­தி­ருந்த உல­மாக்கள், இளை­ஞர்கள் கூட கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வா­றான கைதுகள் முஸ்லிம் சமூ­கத்தை அதி­ருப்­திக்­குள்­ளாக்­கி­யுள்­ள­துடன் அச்­சத்­தையும் தோற்­று­வித்­துள்­ளது. இது­போன்ற கைதுகள் மற்றும் சோத­னைகள் எதிர்­கா­லத்­திலும் தொடரக் கூடும். சந்­தேகம் என்ற போர்­வையில் பலரும் கைதாகக் கூடும். கடந்த யுத்த காலத்தில் இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட ஏரா­ள­மான தமிழ் இளை­ஞர்கள் இன்றும் கூட சிறை­க­ளி­லேயே காலத்தைக் கடத்தி வரு­கின்­றனர். இதே நிலை முஸ்லிம் இளை­ஞர்­க­ளுக்கும் ஏற்­ப­டாது என்று சொல்­வ­தற்கு எந்த உத்­த­ர­வா­தமும் இல்லை.

என­வேதான் படை­யி­ன­ராலும் சரி ஏனைய தரப்­பு­க­ளாலும் சரி அப்­பாவி முஸ்லிம் மக்­களின் உரி­மைகள் மீறப்­ப­டும்­போது அது தொடர்பில் உரத்துக் குரல் கொடுக்­கவும்  அவற்றை சட்ட ரீதி­யாக எதிர்­கொள்­ளவும் முஸ்லிம் சமூகம் தயா­ராக வேண்டும். இதற்­காக முஸ்லிம் சட்­டத்­த­ர­ணி­களும் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­களும் இணைந்து செயற்­பட முன்­வர வேண்டும்.

மாவட்டம் தோறும் இதற்­காக விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்க வேண்டும். மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவாகும்போது உரிய தரப்புகளுடன் தொடர்புபடவும் அற்ப காரணங்களுக்காக கைது செய்யப்படும் அப்பாவி இளைஞர்களை விடுவிக்கவும் இக் குழுவினர் முன்னின்று செயற்பட வேண்டும். இது விடயமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இக் குழு விரைந்து செயற்பட்டு கைதாகியுள்ள அப்பாவிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
-Vidivelli

No comments

Powered by Blogger.