Header Ads



"அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவ, சேவை கட்டாயப்படுத்தப்பட வேண்டும்"

இலங்கையர்கள் அனைவருக்கும் இராணுவ சேவை கட்டாயப்படுத்தப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அடிப்படை ரீதியிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு வழிகளிலான தந்திரோபாயங்கள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் பேதங்களை களைந்து நாட்டின் தலைவர்கள் குறுகிய, இடைக்கால மற்றும் நீண்டகால தீர்வுத் திட்டங்களை உடனடியாக அமுல்படுத்துவதற்கு முன்வர வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓர் நடவடிக்கையாகவே கட்டாய இராணுவ சேவை அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநேக நாடுகளில் இவ்வாறு கட்டாய இராணுவ சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அண்மையில் சில நாடுகளில் பெண்களுக்கும் கட்டாய இராணுவ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

18 வயதை பூர்த்தி செய்யும் அனைத்து ஆண்களும் இராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட படைச் சேவைகளில் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டாயம் உள்ளீர்க்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சமூக நிலைமை, இன, மத பேதமின்றி அனைத்து பிரஜைகளுக்கும் இவ்வாறு இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமென அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

4 comments:

  1. Excellent Idea. Everyone will get opportunity to serve Mother SriLanka.

    ReplyDelete
  2. Good idea. This will make all Tamils and Muslims feel they are Sri Lankans first.

    ReplyDelete
  3. Please think twice. Guys he is an mosat (isis) agent.

    ReplyDelete

Powered by Blogger.