Header Ads



பொட்டு வைக்கும் உரிமையை, பெற்றுக்கொடுத்தார் அஷ்ரப்


1995 களில் சந்திரிக்கா அரசில் ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தில் ஒரு சம்பவம். செய்தி வாசிக்கும் போது யாரும் தமது மத அடையாளத்தை வெளிக்காட்ட கூடாது என்று ஒரு உத்தரவு கூட்டுத்தாபனத்தின் மேலிடத்திலிருந்து பிறப்பிக்கப்படுகிறது. 

இதனால் தமிழ் பெண்கள் பொட்டு வைத்து கொண்டு செய்தி வாசிக்க தடை ஏற்படுகிறது. இதற்கெதிராக குரல் எழுப்ப ஆளுங்கட்சியில் தமிழ் சமூகம் சார்ந்த அமைச்சர் யாரும் இருக்கவுமில்லை. அரசில் பலம் வாய்ந்த அமைச்சராக விளங்கிய SLMC ன் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் துணிந்தார், 

நியாயங்களை எடுத்துக்கூறி தமிழ் பெண்களுக்கு பொட்டு வைக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தார். இந்த செயல் SLMC க்குள்ளே சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. 

முஸ்லிம்களின் உரிமையை பெற்றுக்கொடுக்காமல் தமிழர்களுக்காக உழைத்தார் என்று. கொள்ளுப்பிட்டி மேமன் மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் இதற்கான பதிலையும் வழங்கினார். அவர் சொன்னார் ' தமிழர்களுக்கு கிடைக்காவிட்டால் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்காது ' . இந்த பதிலால் சர்ச்சையும் அடங்கியது.

தலைவர் அஷ்ரப் எங்கே? ஐயா சம்பந்தன் எங்கே? ?

அவரல்லவோ தலைவர்.

8 comments:

  1. தம்பி அஷ்ரப் சேரை விடுங்க. சம்பந்தர் ஐயா உண்மையில் மிகப் பெரிய அரசியல்வாதி. இவரைப் போன்ற தலைவர் எமது சமூகத்திற்கும் கிடைத்திருக்க வேண்டும். எங்கள் தலைவிதி அப்படியாகிவிட்டது. சம்பந்தர் ஐயாவின் பார்வை இன்னமும் பரஸ்பர இன ஒற்றுமைக்குள் வரவில்லை. அவர்களது பார்வை இன்னமும் முஸ்லிம்களை நோக்கி வீசவில்லை. அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. தோழர் தலைவர் அஸ்ரப்புக்கு என் நன்றிகள். சம்பந்தரும் அஸ்ரப்பும் தமிழ் முஸ்லிம் உறவுபற்றி உயர்ந்த நோக்கம் உள்ளவர்கள். சம்பந்தர் கிழக்கு முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுகொடுத்தற்காக இன்றளவும் தீவிர தமிழர் தரப்பால் எதிர்க்கப்பட்டு இகழப்பட்டு வருகிறவர். அவரளவுக்கு தமிழ் முஸ்லிம் உறவை விரும்பும் தலைவர்கள் யாரும் இல்லை. நன்றி சொல்ல வேண்டாம். குருட்டுத்தனமாக இகழாமலாவது இருங்கள்.

    ReplyDelete
  3. எப்போதும் தமிழர்களில் 95% மானோர்,இனவாதமும் பொறாமையும் உள்ளவர்கள்

    ReplyDelete
  4. ullangal thooimai enral uravukalum thooimai adayum

    ReplyDelete
  5. So let's dedicate this song for Late Ashraf.....
    பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
    குளிர் புன்னகையில்
    எனை தொட்ட நிலா
    என் மனதில் அம்பு விட்ட நிலா
    இது எட்ட நின்று
    எனை சுட்ட நிலா......

    ReplyDelete
  6. @Rizard தமிழர்களை இனவாதிகள் என்று கூற முதலில் உங்களுக்கு தகுதி இருக்கா? முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நாம் அறிவோம். கல்முனை நகரில் தமிழ் ஆட்டோ சாரதிகளின் ஆட்டோக்களை தரிக்க அனுமதி மறுக்கப்பட்டது, கிழக்கு மாகாணத்தில் அரச நியமனங்களில் தமிழர் புறக்கணிக்கப்பட்டது, தமிழர் காணிகளை திருட்டுத்தனமாக கபளீகரம் செய்தது(இது சம்பந்தமாக ஹிஸ்புல்லா மார்தட்டும் வீடியோ இன்றும் இணையத்தில் வலம் வருகிறது), திட்டமிட்டு தமிழர் பிரதேச அபிவிருத்திகள் முடக்கப்பட்டது, மன்னார், வவுனியா அரச வீட்டு திட்டத்தில் றிசாத் பதியுதீனினால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது போல இன்னும் பல சம்பவங்களை கூறலாம். அஸ்ரப் ஒரு நல்ல மனிதர் என்பதை நான் மறுக்கவில்லை. மற்றவரை குறை கூறும் முன்னர் நமது தகுதி என்ன என்று சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.