கோயிலில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுக்கப்பட்டதா? தமிழ் பெயரில் செயற்பட்ட, முஸ்லிம் நபர் கைது
(வீரகேசரி)
மூதூர் கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் தமிழ் பெயரில் ஆலய குருக்களுக்கு உதவியாளராகச் செயற்பட்ட நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்தநபர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்தாரா? என்று பக்தர்கள் எழுப்பிய சந்தேகத்தையடுத்து அது தொடர்பில் ஆலய நிர்வாசபையினரை அழைத்து நேற்று மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்தப் பெயரை மறைத்து சிவா என்ற தமிழ் பெயரில் கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூசகருக்கு உதவியளாராக கடந்த 02 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் பூஜையின் போது பக்தர்களுக்கு வழங்கும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளைக் கலந்து கொடுத்து வந்துள்ளதாக பக்தர்கள் சிலர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் கடையொன்றில் கையடக்க தொலைபேசிக்கான அட்டைகளை திருடி சேருவில பகுதியில் விற்ற போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை மூதூர் பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய போது மேற்படி நபர் தமிழர் அல்லர் என்றும் முஸ்லிம் எனவும் போலியான பெயரில் அங்கு பணிபுரிந்ததுவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இவரை புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து அவதானித்து வந்த நிலையில், இவர் ஏறாவூருக்கு தனது தாயாரின் வீட்டுக்கு சென்று அங்குள்ள பள்ளிக்கு தொழ சென்ற வேளையில் இவர் முஸ்லிம் நபர் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
இதற்கிடையில் இவர் பற்றிய ஒரு தகவல் முகப்புத்தக நூலில் வெளிவந்த போது தான் தமிழர் தான் முஸ்லிம் அல்ல என மறுத்துரைத்து தன்மீது பொறாமை உள்ளவர்களே இந்த முகநூலை வெளியிட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தனியார் நிறுவனமொன்றில் ஆசிரியராக கடமையாற்றி முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் முடித்ததற்காகவே தான் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூதூர் பொலீசார் ஆலய குருக்களையும் பரிபாலன சபையினரையும் நேற்று சனிக்கிழமை அழைத்து விசாரணைகளை செய்துள்ளனர்.
இதேவேளை கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் குருக்களாக பணியாற்றி வரும் குருக்களுக்கு உதவியாளராக குறித்த நபர் சேர்ந்து கடந்த 02 வருடங்களாக இந்த ஆலயத்தில் பணியாற்றி வந்துள்ளதோடு மேற்படி குருக்களிடமிருந்தே குறிக்கப்பட்ட பணத்தை சம்பளமாக பெற்று வந்துள்ளார் எனவும் ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர். இவர் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரையை கலந்து விநியோகித்துள்ளாரா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மூதூர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிவா, என்று அழைக்கப்படும் குறித்த நபரின் உண்மையான பெயர் புஹாரி முகமது லாபீர் கான் என்றும் இவர் ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்டவரென்றும் ஏலவே மூன்று திருமணங்கள் செய்துள்ளார் எனவும் தெரிய வருகிறது. மூத்த மனைவி ஓட்டமாவடி மீராவோடைச் சேர்ந்த அபுல் ஹாசன் சுபாஹனி என்றும் இரண்டாவது மனைவி மட்டக்களப்பு கரடியனாற்றைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தியென்ற தமிழ் பெண் என்றும் மூன்றாவதாக திருமணம் செய்தவர் கல்முனையைச் சேர்ந்த ------- என்றும் தெரிய வருகிறது. இவர் ஏலவே கற்பழிப்பு மற்றும் ஜீவனாம்சம் வழங்காமை ஆகிய குற்றச்செயல்கள் காரணமாக நீதிமன்ற வழக்குக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் என்றும் இவரது கையடக்க தொலைபேசியை பரிசீலித்த போது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சில தகவல்கள் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment