வில்பத்து வழக்கு - ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரணை
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல், ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28ஆம் திகதி) தீர்மானித்துள்ளது.
வில்பத்து வனத்தை அண்மித்த பகுதிகளிலுள்ள 100 ஏக்கர் நிலப்பரப்பில் முஸ்லிம் மக்களை குடியமர்த்துவதற்காக சட்டவிரோதமாக காணிகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியை தடுத்துநிறுத்துமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனக்த சில்வா மற்றும் நிஷங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வனவளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், வன பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வௌியிட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு, இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த வருடம் நிறைவு செய்யப்பட்டது.
தீர்ப்பு வழங்க திகதி குறிப்பிடுவதற்கு முன்னர் 4 தடவைகள் வழக்கை ஒத்திவைத்து, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமரவர்தன உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment