மன்னித்துவிடு, மனசாட்சியை தொட்டு சொல்லிவிடு நண்பா
கண்ணீர் மல்க மண்டியிட்டு வாழ்கிறேனடா நண்பா!
உன் கோபம் நியாயமானது
உன் பேச்சு அர்த்தமானது
ஆனால் உன் எண்ணம் தவரானதடா நண்பா!
இனம் என்று பார்த்தால்
நீயும் நானும் வேறு.
மதம் என்று பார்த்தால்
நீயும் நானும் வேறு.
மொழி என்று பார்த்தால்
நீயும் நானும் வேறு.
மனிதன் என்று பார்த்தால்
நீயும் நானும் ஒன்றடா.
நட்பு என்று பார்த்தால்
அதற்கில்லை ஈடடா.
உன்னிடம் காரணம் சொல்ல
நினைக்கவில்லை நண்பா.
இந்த நண்பனையும் ஒர்
காரணமாய் நினைதாயடா நீ!
மனம் பதறுகிறது நண்பா.
நடந்த தவறில் என் உறவுகளை- நினைக்கவில்லை
உன்னை நினைத்தே மனம் பதறிநேனடா நண்பா.
உன் மனசாட்சியை தொட்டு சொல்லடா
என் நட்பில் குறை ஏதும் உண்டா?
என் பேச்சில் நிறை தவறி போனேனா?
என் நடத்தையில் மாற்றம்தான் கண்டாயா?
அல்லது வேறு மதத்தவன் என்று பழகித்தான் இருப்பேனா?
இப்படி இருக்க என்னையும் தீவிரவாதியாய்
உன் மனம் நினைக்க தோன்னுகின்றதா? சொல்
முஸ்லிம் சமுகத்தை
தவறென நினைக்கும் போது
அதில் உன் நண்பன் நானும் வருவேனே
அதை நீ மறந்துவிட்டாயடா – நண்பனே!
கண்ணீர் மல்கி
மன்னிப்பு கேட்கிறேன் நண்பா.
என் சமுகத்தில் ஓரிருவர் பிழை என்பதால்
எல்லோரையும் பிழையென நினைக்காதே நண்பா.
உயிரை உடம்பில் இருந்து பறித்த கயவன்
முஸ்லிமாக முடியாது நண்பா.
உண் எண்ணங்களாலும், வார்த்தைகளாலும்
என்னையும் நீ கொன்று விடாதே.
இறுதியாக ஒன்றை சொல்கிறேன்
என் மரணத்தின் பின் என்னை
ஓர் கூட்டம் சுமந்து செல்லும்.
அதில் நீயும் இருந்தால் – என்னை நோக்கி
உன் விழிகள் கண்ணீரை வார்க்கும்.
அப்பொழுது புரிந்து கொள்வாயா?
இந்த முஸ்லிம் நண்பனை.
மன்னித்துவிடு நண்பா.......
Post a Comment