Header Ads



இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் ஒட்டுமொத்த, முஸ்லிம்கள் மீதும் சந்தேகம் கொள்வது கவலைக்குரியது

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டனர் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அன்று தமிழர்களுக்கு ஏற்பட்டதை போன்று இன்று இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் சந்தேகம் கொள்வது கவலைக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கான சரியான வாய்ப்புகளை இனியாவது ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இலங்கை சிங்கள பெளத்த நாடு, எனினும், இந்த நாட்டில் ஏனைய மதங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனை சகல மக்களும் ஏற்றுகொள்ள வேண்டும். எனினும், இதனை சிலர் ஏற்க மறுக்கின்றனர்.

மத இன பாகுபாட்டுக்கு அப்பால் இலங்கையர் என்ற உணர்வுடன் நாம் இணைந்து செயற்பட வேண்டும். இன்று மலேசியா, சிங்கபூர் ஆகிய நாடுகளை பார்த்தால் அவர்கள் நாடாக இணைந்து வாழ்கின்றனர்.

நாமும் அதேபோல் சிந்திக்க வேண்டும். அதை விடுத்தது இதனை வைத்து அரசியல் செய்யக் கூடாது.

இந்த விடயத்தினை வைத்துக்கொண்டு எதிர்தரப்பினர், அரசியல் செய்யலாம் என நினைப்பது தவறானது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.