Header Ads



மீட்கப்படும் வாள்கள் பற்றிய காணொளிகளை, ஒளிபரப்ப வேண்டாம் என உத்தரவு


உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையில் மீட்கப்படும் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் சகல ஊடக நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.

இது போன்ற காணொளி பதிவுகள் ஊடக நிறுவனங்களில் காணப்பட்டால் அவற்றை ஒளிபரப்ப வேண்டாம் என்பதே அரசாங்கத்தின் கோரிக்கை என அதன் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். முழு சமுதாயத்திடமிருந்து எல்லா பொருளையும் சுத்தமாக துடைத்தெடுத்த நிலையில் எதுவும் இனி கிடைக்கப்போவதில்லை என்ற நிலையில் இப்படி அறிவித்திருப்பது ஒரு கபட நாடகம் போதுமானளவு சேதாரத்தை ஊடகங்கள் செய்த நிலையில் பெரும்பான்மை சமூகம் இன்னும் தொகையாக ஆயுதங்கள் கிடைக்கிறது இதை இந்த தம்பிலாகே ஆண்டுவ மறைக்கிறது என்ற பிரச்சாரத்தை ஊக்குவிக்க செய்யும் முயற்சி . ஆரம்பத்தில் பொதுமன்னிப்பு கொடுத்து அது காலாவதியானபின் நடவடிக்கை எடுக்க விடுக்கப்பட்ட கோரிக்கைகளை வேண்டுமென்று புறந்தள்ளிய கடைந்தெடுத்த முனாபிக் தனம். இதை இப்படியோ விட்டால் இன்னும் இரண்டு நாட்களில் இந்த கத்தி சமாச்சாரம் முடிந்து விடும் இதனால் இருக்கிற காலம் முழுக்க நமக்கு அவப்பெயரை சுமக்கவரும்.

    ReplyDelete

Powered by Blogger.