Header Ads



எந்த குற்றமும் செய்யாத நான், யாருக்கும் அஞ்சி பதவி விலகப்போவதில்லை - ரிஷாத்

எந்­த­வித  குற்­றமும் செய்­யாத என்னை  பத­வி வில­கு­மாறு  கூறு­வதை ஏற்க நான் தயா­ரில்லை. எனக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்­கொள்ள நான் தயார் என அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளித்து என்னை நிரூபிப்பேன் எனவும் அவர் குறிப்­பிட்டார்.  

கடந்த 2014, 2015ஆம் ஆண்­டு­களில் அமைச்­ச­ராக இருந்த காலங்­களில் அரிசி இறக்­கு­ம­தியில் செய்­யப்­பட்ட முறைகேடுகள் குறித்த குற்­றச்­சாட்டில் நேற்று முன்­தினம் விசா­ர­ணை­க­ளுக்­காக  அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் நிதிக் குற்ற விசா­ரணை பிரி­வுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தார். 

இந்­நி­லையில் அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் அவர் மீதான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விட­யங்கள் குறித்து வின­வியபோதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் இது குறித்து  மேலும் கூறு­கையில், 

கடந்த 2014, 2015ஆம் ஆண்­டு­களில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் அரிசி இறக்­கு­மதி விட­யங்­களில் சில முறை­கே­டுகள் இடம்­பெற்­ற­தாக கூறியே அது குறித்து வாக்­கு­மூலம் ஒன்­றினை பெற்­றுக்­கொள்ள விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தேன். இது குறித்து நான் எனக்கு தெரிந்த அனைத்து விட­யங்­க­ளையும் முன்­வைத்­துள்ளேன். 

மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெறும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணை­க­ளுக்கு நான் தடை­யாக இருக்­கப்­போ­வ­தில்லை. ஊட­கங்கள் இன்று என்னை தவ­றான வகையில் சித்­த­ரிக்க முயற்­சித்து வரு­கின்­றன . என்­ மீது எந்த தவறும் இல்­லாத நிலையில் என்னை குற்­ற­வா­ளி­யாக காட்­டவே முயற்­சிக்­கின்­றனர். சிலர் என்னை பயங்­க­ர­வாதி என்றே கூறும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. 

இன்று எனக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்­றினை கொண்­டு­வந்­துள்­ளனர்.   நான் பதவி விலக வேண்டும் எனவும் இவர்கள் கூறு­கின்­றனர். நான் எந்த தவறும் செய்­யாத நேரத்தில் குற்­றச்­சாட்டை ஏற்க நான் தயா­ரில்லை. அதேபோல் இவர்­க­ளுக்கு அஞ்சி நான் எனது அமைச்சை துறக்­கவும் தயா­ரில்லை. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரட்டும் நான் அதற்கு முகங்­கொ­டுக்க தயா­ராக உள்ளேன். என்னால் எந்த குற்­றமும் இடம்­பெ­றாத நிலையில் நான் தைரி­ய­மாக  அதற்கு முகங்­கொ­டுக்க தயா­ராக உள்ளேன். அத்­துடன் இப்­போது பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதிலும் நான் சாட்­சி­ய­ம­ளிக்க தயா­ராக உள்ளேன். என்னை நியா­ய­மா­னவன் என நிரூ­பிக்க என்னால் முடியும்.

எதிர்க்­கட்­சி­யினர் முன்­வைக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்­துமே அடிப்­படை நியா­ய­மற்­ற­தா­கவே உள்­ளன. குறிப்­பாக நான் இரா­ணு­வத்­த­ள­ப­தியை தொடர்­பு­கொண்டு அழுத்தம் கொடுத்­த­தாக கூறு­வது முற்­றிலும் பொய்­யா­னது. அதனை இரா­ணு­வத்­த­ள­ப­தியே கூறி­யுள்ளார். 

மேலும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு நான் ஒரு­நாளும் துணை­போ­னவன் அல்ல. நான் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சி­யிலும் அமைச்­ச­ராக செயற்­பட்­டுள்ளேன். அப்போது என்னுடன் இணைந்து செயற்பட்ட நபர்கள் தான் இன்று தமது அரசியல் சுய லாபங்களை கருத்திற்கொண்டு எனக்கெதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர். யார் அழுத்தம் கொடுத்தா லும் என்மீது குற்றம் இல்லாத நிலையில் அனைத்து சவால்களையும் தைரியமாக முகங்கொடுக்க நான் தயார் என்றார்.

4 comments:

  1. போலியான,ஆதாரமில்லாத,சோடிக்கப்பட்ட இனவாதிகலின் கேவலமான அரசியல் லாபத்துக்காக.பதவி விலக தேவையில்லை.( இதுதான் தில்)

    ReplyDelete
  2. May Allah help your if your are in truth and May Allah destroy all those who create falls criticism against you (channels, politicians, parties and individuals). May Allah destroy all the types of terrorists and Racist from this land.

    We ask the RULER of universe (GOD) to assign A PEACEFUL and JUST FULL Ruler to our country in near future and Make a Peaceful life for all the citizens of this country.

    ReplyDelete
  3. உங்கள் பக்கம் யார் இல்லாவிடினும், படைத்தவன் இருக்கிறான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!

    ReplyDelete
  4. Masahallah good desicion go ahead brother!

    ReplyDelete

Powered by Blogger.