என் அருமை சமுதாயமே...!
உன்னை அழிக்க பள்ளிக்கு வெளியில் ஒரு பெருங்கொண்ட கூட்டம் காத்திருக்கிறது; இன்னும் நீ பள்ளிக்குள் என்ன செய்து கொண்டிருக்கிராய்...?
ஒ ! சுன்னத்துகள் மீது சண்டையா...?
வெளியில் இருப்பவர்கள் உன் தலையை எடுக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிரார்கள், நீ இன்னும் தலைக்கு மேல் தொப்பி போடுவது பற்றி சட்டம் போட்டுக் கொண்டிக்கிறாய்...!
அவர்கள் உன் கையை உடைக்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிரார்கள் நீ இன்னும் கைவிரலை ஆட்டுவதை பற்றி சட்டம் போட்டுக் கொண்டிருக்கிராய்...!
என் அருமை சமுதாயமே !
ஒன்றினைக்க முயற்சிப்பவர்களிடம் 'தவ்ஹீது ஷிர்கும் எப்படி ஒன்று சேரும்' என கேட்கிராயே... உன்னை இணைவைக்கும் ராமசாமியுடனும், குப்புசாமியுடனும் ஒன்று சேர சோல்லவில்லை.
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற உன்னதமான ஏகத்துவ கலிமாவை மொழிந்த அப்துல்லாஹ்வுடனும், அப்துர் ரஹ்மானுடனும் தான் ஒன்று சேர சொல்கின்றோம்...!
தவ்ஹீதை நிலைநாட்டத் துடிக்கும் அமைப்புகளே...!
சமுதாயத்தோடு ஒன்றி போவதும், ஒன்றுபட்ட சமுதாயமாய் வாழவும் இஸ்லாம் கற்றுத்தருவதை நீ அறியவில்லையா...?
ஒன்றுபட்ட சமுதாயத்தின் மீதுதான் அல்லாஹ்வின் அருளும் உதவியும் இரங்குகிறது என்பதை நீ அறியவில்லையா...?
என் அருமை சமுதாயமே...!
புரிந்துகொள்..... இன்று நீ ஒன்றுபடவில்லை என்றால் நாளை இஸ்லாத்தில் இருந்து கொண்டு, அறியாமையால் அனாச்சாரம் செய்ய அவர்களும் இருக்கமாட்டார்கள்...! தவ்ஹீதை எடுத்துரைக்க நீங்களும் இருக்க மாட்டீர்கள்.....
என் அருமை சமுதாயமே...!
ஒன்றுபடுவோம்...சுன்னத்-வல்-ஜமாஅத் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் எனறும் JAQH என்றும் TNTJ, INTJ, TMMK என்றும் அடையாளம் காட்டுவதை நிருத்துவோம்.
ஒன்றாக கைகோர்த்து 'நான் முஸ்லிம்' என கூறுவோம்.
நம்மில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறப்போம்.
நம் சமுதாய பெண்களை காவு வாங்கி கொண்டிருக்கும் பாஸிஸ சக்திகளை எதிர்ப்போம்.
இஸ்லாத்திற்காகவும் அல்லாஹ்விற்காகவும் அனைத்தையும் இழப்போம். முடிந்தாள் உயிரையும்...!
இழப்பிற்கு பகரமாய் நிச்சயமாய் நாம் ஜன்னத்தை அடைவோம், இன்ஷா அல்லாஹ்.
ஒன்று பட்ட சமுதாயத்தின் மீதுதான் அல்லாஹ்வின் அருளும் உதவியும் இரங்குகிறது...! அதனால்..... ஒன்று படுவோம்.
என் அருமை சமுதாயமே !
ஒன்று படுவோம் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் . பிரிந்தும், பிளவு பட்டும் வாழக் கூடாது என்றுதான் இறை தூதர்கள் அனைவரும் அறிவுறுத்தினார்கள்.
இறை நெறி மக்களை ஒன்று சேர்க்க வந்துள்ளதே தவிர பிரிப்பதற்கு அல்ல.
ஆகவே படைத்த இறைவனுக்கு அடி பணிந்து ஒன்றுபடுங்கள்.
வெறுப்புக்கும், பிரிவினைக்கும் பதிலாக அன்பின் பாதையை பின்பற்ற நமது நபி (ஸல் ) நவின்றார்கள்.
முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாகஇருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்;அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாகஇருக்கின்றான். குர்'ஆன் 5:54
- ஜஸாக்கல்லாஹ்
மறக்க முடியாத மனிதர் பழனிபாபாவின் உரையிலிருந்து.
Thaha Muzammil
சகோதரர் பழனி பாபாவிட்கு அல்லாஹ் சுவனத்தை அளிப்பானாக அமீன்!
ReplyDeleteஇது இன்றைய காலத்திட்க்கு மிக பொருத்தமான நூறு வீதம் உண்மையான பதிவாகும் நாம் அனைவரும் இப்போது ஜம்மிய்யதுல் உலமாவின் தலைமையில் ஒன்று சேர வேண்டும் நம் அனைவருக்கும் ஒரு தலைமைத்துவத்தை வழங்க அது தான் காலத்தின் சிறந்த அமைப்பு
இந்த பதிவை இட்ட சகோதரருக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக
முதலில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கீழ் எல்லா இயக்கங்களும் தங்கள் இயக்கங்களின் பெயர்களை அழித்து விட்டு இனையவேண்டும்.பள்ளிகள் அனைத்தும் ஜம்மியத்துல் உலமாவின் கீழ் கொண்டு வரவேண்டும்.தப்லிக்,தவ்ஹீத் என பள்ளிகல் இல்லாமல் அனைத்தும் பொதுவாக எல்லா Muslim மக்களும் தொழ வேண்டும்.யார் சரியாக அல்லது பிழையாக தொழுகிரார் என்பதை அல்லாஹ் தீர்மானிக்கட்டும்.அது மனிதனாகிய உங்களின் வேலை அல்ல.என்வே விரைவாக இதை செய்ய வேண்டும் இனியும் தாமதித்தால் எமது சமூகத்தை திட்ட மிட்டு நசுக்க அவர்கள் முனைவார்கல்.
ReplyDeleteSure Brother Rizard.. We have to do immediately what you said. We are also sticking in it. Well Qualified ACJU with intellectuals( Islamic scholars without following any Jamaath, Lawyers,Doctors, Principles, Teachers, Well Qualified Business Man, Ect)
ReplyDeleteஒன்று சேரனும் என்பது கட்டாய தேவை தான். அதை நடைமுறை படுத்த சரியான பொறிமுறை ஒன்றை கொண்டு வரவெண்டும். நீ பெரிதா நான் பெரிதா என்று இல்லாமல் அல்லாஹ் தான் பெரியவன் என்று இரங்கவெண்டும். இப்போதைக்கு எனக்கு தெரிந்து பொதுமக்கள் ஒற்றுமையாக தப்லீக், தௌஹீத் என்று பாராது போவதை அவதானிக்க முடியுது.இன்னும் தலைமைகள் தான் இறங்கிவர வேண்டும்.
ReplyDeleteஒன்று சேரனும் என்பது கட்டாய தேவை தான். அதை நடைமுறை படுத்த சரியான பொறிமுறை ஒன்றை கொண்டு வரவெண்டும். நீ பெரிதா நான் பெரிதா என்று இல்லாமல் அல்லாஹ் தான் பெரியவன் என்று இரங்கவெண்டும். இப்போதைக்கு எனக்கு தெரிந்து பொதுமக்கள் ஒற்றுமையாக தப்லீக், தௌஹீத் என்று பாராது போவதை அவதானிக்க முடியுது.இன்னும் தலைமைகள் தான் இறங்கிவர வேண்டும்.
ReplyDelete