எமது குடும்பம், பௌத்தத்திற்கு செய்த பங்களிப்பு - பட்டியலிடும் கபீர்
குண்டு தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி மகிந்த ராஜபக்ச உட்பட எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் பெற முயற்சித்து வருவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கேகாலை மாவனெல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பாடசாலைகளுக்கு செல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களை பாடசாலைக்கு அழைத்துச் சென்றமைக்காக நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்குடி நன்றி தெரிவித்தேன். மகிந்த ராஜபக்ச குண்டு தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி கரையேற பார்க்கின்றார்.
நான் சிறந்த பௌத்தன் என்பதை உறுதியாக கூற முடியும். கலிகமுவையில் உள்ள எனது தந்தையின் காணிகளில் இரண்டு பௌத்த விகாரைகள் இருக்கின்றன. இதனை தவிர பௌத்த விகாரைகளுக்கு காணிகளை அன்பளிப்பு செய்துள்ளோம்.
அரநாயக்க அஸ்மடல பிரதேசத்தில் இருக்கும் பொது மயானம் எனது தந்தையின் காணியிலேயே இருக்கின்றது. கலிகமுவை மத்திய மகா வித்தியாலயம் எனது தந்தையின் காணியிலேயே இருக்கின்றது. நாங்கள் இப்படித்தான் சிங்கள மக்களுக்காக வேலை செய்திருக்கின்றோம்.
நான் எனது மாவட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். சிங்கள மக்களே எனக்கு வாக்களித்துள்ளனர். இன, மதம் பார்த்து வாக்களிக்கவில்லை. வேலை செய்ய முடியும் என்பதால், வாக்களித்தனர். நான் பணியாற்றவிட்டால், என்னை தோற்கடித்து விடுங்கள்.
நான் தலைவணங்கி வீட்டுக்கு செல்கிறேன். நான் உங்கள் பொது சேவகன், சேவையாற்ற முடியும் வரை சேவையாற்றுவேன். கடந்த நான்கு ஆண்டுகளாக கேகாலை மாவட்ட மக்களுக்காக நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளேன். இன, மத பேதங்களை பார்க்கவில்லை.
பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் நான் பின்பற்றும் மதத்தை சார்ந்தவர்கள் அல்ல. இதன் காரணமாகவே அவர்களின் உடல்களை இஸ்லாமிய மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மத குருக்கள் கூறினர் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment