Header Ads



"முஸ்­லிம்கள் தொடர்­பு­பட்ட, முத­லா­வது சம்­பவம் இது­வாகும்"

முஸ்­லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் வழங்கிய நேர்காணல்

Q: தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் அனர்த்­தங்­க­ளை­ய­டுத்து முஸ்­லிம்கள் அச்­சத்தில் வாழ­வேண்­டி­யேற்­பட்­டுள்­ள­தல்­லவா!

தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் முஸ்­லிம்­களைத் தலை­கு­னிய வைத்­துள்­ளது. இந்தத் தாக்­கு­த­லுக்கு எவ்­வாறு பதி­ல­ளிப்­பது என சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. முஸ்­லிம்கள் இந்­நாட்டில் 1200 வரு­ட­கால வர­லாற்றைக் கொண்­ட­வர்கள். இந்த வர­லாற்றுக் காலத்தில் முஸ்­லிம்கள் தொடர்­பு­பட்ட முத­லா­வது சம்­பவம் இது­வாகும்.

ஐ.எஸ். அமைப்பு இஸ்­லாத்தில் அனு­ம­திக்­கப்­பட்­டவோர் அமைப்­பல்ல. அந்த அமைப்பின் செயல்கள் இஸ்­லாத்­துக்கு விரோ­த­மா­ன­தென பல­வ­ரு­டங்­க­ளுக்கு முன்பே அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா உட்­பட முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் பிர­க­டனம் வெளி­யிட்­டுள்­ளன.

இன்­றைய சூழ்­நி­லையில் முஸ்­லிம்­களின் சமய வழி­பா­டுகள் சவால் நிறைந்­த­தாக அமை­யலாம். எமது முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா தடை­செய்­யப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையும் வலும்­பெற்று வரு­கி­றது. எனவே முஸ்லிம் சமூகம் அச்­சத்தை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

இந்த தற்­கொலைக் குண்டு தாக்­கு­தல்கள் தீவி­ர­வா­தி­க­ளாலே மேற்­கொள்ளப் பட்­டுள்­ளன. இந்த தீவி­ர­வாத செயல்கள் மத ரீதி­யாக நோக்­கப்­ப­டலாம். பழி தீர்க்­கப்­ப­டலாம் என முஸ்லிம் சமூகம் கரு­து­வதால் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் சர்­வ­மத உயர்­மட்­டக்­குழு என்­பன ஒன்­று­கூடி நல்­லு­ற­வினைப் பலப்­ப­டுத்தி சமா­தா­னத்தை நிலை நிறுத்­து­வ­தற்­கான திட்­டங்­களை வகுக்­க­வேண்டும்.

இச்­சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்கள் பொறு­மை­யாக இருக்­க­வேண்டும். 350 இற்கும் மேற்­பட்டோர் பலி­யெ­டுக்­கப்­பட்­டுள்­ளார்கள். சுமார் 500 பேர் காயங்­க­ளுக்­குட்­பட்­டுள்­ளனர். இந்­த­வ­டுக்கள் ஆறு­வ­தற்கு நீண்­ட­காலம் செல்­லலாம். அதனால் முஸ்லிம் சமூகம் தாம் பொறு­மை­யாக இருந்து தீவி­ர­வா­தத்­துக்கும் தங்­க­ளுக்கும் தொடர்­பில்லை என்­பதை அவர்­க­ளுக்கு நிரூ­பிக்­க­வேண்டும். நம்­பிக்­கை­யூட்ட வேண்டும்.

Q: பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கப்­பட வேண்­டுமா?

பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும் என்­றாலும் அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் பாது­காப்பு பெற்­றுக்­கொள்­வ­தென்­பது நடை­முறைச் சாத்­தி­ய­முள்­ள­தாகத் தெரி­ய­வில்லை. அர­சாங்கம் வெள்­ளிக்­கி­ழ­மை­க­ளிலே பாது­காப்பு வழங்­கக்­கூடும். வெள்­ளிக்­கி­ழ­மை­களில் பாது­காப்பு வழங்­கு­மாறே பாது­காப்புச் செய­லா­ள­ரிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களும் பாது­காப்புச் செய­லா­ளரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே இந்தக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் நாம் எமது ஜும் ஆ பிர­சங்­கத்தை சுருக்­கிக்­கொள்ள வேண்டும். பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் பார்­சல்கள் கொண்டு வரு­வ­தற்குத் தடை விதிக்­க­வேண்டும். பள்­ளி­வா­ச­லுக்கு புதி­ய­வர்கள் வருகை தந்தால் அது தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்டும். பெண்கள் வீடு­க­ளிலே தொழு­கை­களை மேற்­கொள்­ள­வேண்டும்.

நோன்பு காலத்தில் இரவு நேர தொழு­கை­க­ளுக்குச் செல்ல வேண்­டி­யி­ருப்­பதால் பள்­ளி­வா­சல்­களில் பாது­காப்பு ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

Q:கொள்கை ரீதியில் முரண்­பட்­டுள்ள தஃவா அமைப்­பு­களை எவ்­வாறு ஒன்­றி­ணைக்­கலாம்!

நாட்டில் பல்­வேறு தஃவா அமைப்­புகள் இயங்­கி­வ­ரு­கின்­றன. தஃவா அமைப்­புகள் சிறு சிறு விட­யங்­க­ளுக்­கெல்லாம் பிரிந்து சென்று புதி­தாக அமைப்­பு­களை நிறு­விக்­கொள்­கின்­றன. இவ்­வாறு பிரிந்து சென்று உரு­வாக்­கப்­பட்ட அமைப்பே தேசிய தெளஹீத் ஜமா அத் ஆகும்.

கொள்கை மற்றும் கருத்து முரண்­பா­டு­களைக் கொண்­டுள்ள தஃவா அமைப்­பு­களை ஒன்­றி­ணைப்­ப­தற்கு தொடர்ந்தும் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது. ஆனால் சில அமைப்­புகள் தங்கள் கொள்­கை­களில் விடாப்­பி­டி­யாக இருப்­ப­தாக அறிய முடி­கி­றது. என்­றாலும் தஃவா அமைப்­பு­களை ஒன்­றி­ணைக்கும் காலம் வந்­துள்­ளது. இல்­லையேல் தஃவா அமைப்­புகள் சட்­ட­ரீ­தி­யாக தடை­செய்­யப்­படும் நிலை உரு­வா­கலாம். தீவி­ர­வாத கொள்கை கொண்­டுள்ள அமைப்­பு­களைத் தடை­செய்ய வேண்டும் என தற்­போது உயர்­மட்­டத்தில் பேசப்­பட்டு வரு­கி­றது.

Q: மத்­ர­ஸாக்கள் மீதான சந்­தே­கங்­களை எவ்­வாறு தவிர்க்க முடியும்?

தற்­கொலைக் குண்டு தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மத்­ர­ஸாக்­க­ளிலே தீவிரவாதிகள் உருவாக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் சிலரால் விவாதிக்கப்படுகிறது.

மத்ரஸாக்கள் தொடர்பான சந்தேகங்களைத் தவிர்ப்பதற்கு மத்ரஸாக்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து காட்டப்படவேண்டும். அங்கு என்ன போதிக்கப்படுகிறது என்பதை நேரில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும். அத்தோடு மத்ரஸாக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றன. மத்ரஸாக்கள் ஒருகட்டுக் கோப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

ஏ.ஆர்.ஏ. பரீல்

3 comments:

  1. ஒரு அமைப்பின் கீழ் கட்டுப்பட மறுப்பவர்களைத் தடைசெய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.தாமதிக்க முடியாது முஸ்லீம் பெயர்களில் வாழ்வதற்கு வெட்கம் அல்லது பயம் காரணமாக பெரும்பான்மை மக்களின் பெயர்களை வைத்துக் கொள்ள சில முஸ்லிம்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்ற செய்தி இன்னும் வீர வசனம் பேசும் சில முஸ்லிம்களின் சிந்தனையைச் சீராக்கட்டும்.

    ReplyDelete
  2. All this took place with fate and predestination: We all believe in it. our other faith people too have faith in this article of fate and predestination. No one could over rule what God has ruled out, What He wills take place in this world. There is no justification what this idiots has done. It is a crime. Sri lankans will never forgive them at all.But what we could do now is to learn a lesson from this.. How to live among non-Muslims? how treat them well in kind and love? How to consider about our behaviours and manners.. We must learn a lesson from our RC brothers. They have shown the entire world a merits of patience. I thank them all for stopping any tension between communities. We should thank monks too. Many of them calm down the tensions. Except a some extremists 90% of the people in the majority community said Muslims are nothing to do with this . so, we should appreciate that as well.

    ReplyDelete
  3. அப்பாவி பொது மக்களுக்கு எதிராக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தற்கொலை தாக்குதல்களும் இதுவே ஆகும்

    ReplyDelete

Powered by Blogger.