Header Ads



கர்ப்பத் தடை அறுவைச் சிகிச்சைகளை, தனி ஒரு வைத்தியரினால் செய்யமுடியாது - ஜனாதிபதி

பெரும்பான்மை இனத்தவர்களின் 4000 பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டதாக சிங்கள தினசரி பத்திரிகையொன்று வியாழக்கிழமை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லிம் வைத்தியர் ஒருவரின் பெயர் குறிப்பிட்டு சனிக்கிழமை அதே பத்திரிகை தலைப்புச் செய்தி பிரசுரிப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுபற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இவ்வாறான அறுவைச் சிகிச்சைகளை வைத்தியர் ஒருவர் தனித்துச் செய்வதில்லை. குழுவினராகத்தான் அதனை மேற்கொள்கின்றனர் என்றார். குறித்த வைத்தியர் பெருந்தொகைப் பணத்தை வைத்திருந்தாகக்கூறி தற்போது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அப்படியானால், இந்த விவகாரத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களமே கையாண்டிருக்க வேண்டும் என்று பிரஸ்தாபிக்கப்பட்டது.

3 comments:

  1. ஜனாதிபதி முதலில் ஊடகம் தொடங்கி அனத்து துறையிலும் நாட்டில் மலிந்து விட்ட இனவாதத்தையும் அதனை தூண்டி விடும் சிறு குலுவினரயும் கட்டுப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. Dear president ,
    As a leader of srilanka, please take the action against the medias who are creating unwanted problems among srilankan based on Religion.
    please are watching you further ...

    ReplyDelete

Powered by Blogger.