முஸ்லிம்களின் வியாபாரம் வெற்றிகரமாகச்செல்ல, 74 வீதமான தமிழர்களின் நுகர்வுகளே காரணம் - சிறிநேசன் Mp
தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வழங்கிய செவ்வி.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மெல்ல, மெல்ல மக்கள் குண்டுச் சத்தங்களையும், துவக்கு வெடி ஓசைகளையும், மறந்திருந்தார்கள். படிப்படியாக மக்கள் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சுடன் சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் சர்வதேசத்தில் இருந்து இயங்குகின்ற ஐ.எஸ், ஐ.எஸ், எனும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு இலங்கையிலிருக்கின்ற தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பினூடாக கடந்த 21ஆம் திகதியன்று தற்கொலை குண்டுத்தாக்குதலை நடாத்தி இலங்கையையே நிலைகுலையச் செய்துள்ளது. இத்தாக்குதல் நாடெங்கனும் அதிர்ச்சி அலையைத் தோற்றுவித்துள்ள நிலையில் அது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.
கேள்வி : அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக்கு குண்டுத்தாக்குதலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில் : மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமின்றி நாட்டின் ஏனைய இடங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை நாட்டில் பயங்கரவாதம் எந்த அளவிற்கு தலைதூக்கியுள்ளது என்பதைத்தான் நான் பார்க்கின்றேன். அடிப்படைவாதிகளாக இருந்தாலும், தீவிரவாதிகளாக இருந்தலும், எந்தவொரு விடயத்தை செய்வதென்றாலும் அதற்குரிய காரண காரியத்தை முன் வைப்பார்கள். ஆனால் இந்த குண்டுத்தாக்குதலை நோக்குகின்றபோது எந்தவித இலக்குமில்லாமல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு செய்தவர்கள், விஞ்ஞான உலகத்திற்குப் பொருத்தமில்லாத கொள்கைகளை வைத்திருக்கின்றார்கள். அவர்கள் ஒரு கற்பனையான உலகத்தில் வாழ்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளது. இதனை ஒரு பயங்கரவாத தாக்குதலாகவும், வழிபாட்டுத்தலத்தின் மீதும் பச்சிளம் குழந்தைகளையும் இலக்குவைத்து தாக்குதல் நடாத்தியது ஒரு மிலேச்சத்தனமான தாக்குதலாகவுமே நான் பார்க்கின்றேன்.
கேள்வி : அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஒருவித பீதியுடனும், பயத்துடனும், வாழ்கின்றனர். இதனை எவ்வாறு போக்கலாம்.
பதில் : மட்டக்களப்பு மக்கள் மாத்திரமின்றி நாட்டிலுள்ள எந்தவொரு குடிமகனும், இவ்வாறான படு பயங்கரமான எந்த தாக்குதலும் இனிமேல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த மோசமான தாக்குதல்களால் மக்கள் நிலைகுலைந்திருக்கின்றார்கள். குறிப்பாக குடும்பத்தையே இழந்த உறவினர்களும், குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களும், பச்சிளம் குழந்தைகளை இழந்த பெற்றோர்களுமாக பல்வேறு மோசமான சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்ற இந்நிலையில் மக்கள் மத்தியிலும் சந்தேகம் ஏற்பட்டுள்தோடு, கோபம், ஆக்கிரோசங்களும், ஏற்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ் பேசுகின்ற இரண்டு சமூகங்கள் அக்கம் பக்கமாக வாழ்கின்றார்கள். இந்நிலையில் எவருக்கும் தெரியாமல் இந்த தாக்குதல் நடந்திருக்கின்றது. இதில் மக்கள் உடல், உள ரீதியாக படு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்நிலையிலிருந்து எவ்வாறு விடுபடப்போகின்றார்கள் என்பது கேள்வியாக உள்ளது.
மனத்தின் பாரத்தை இறக்கி வைக்கும் இடம் வழிபாட்டுத்தலங்களாக இருக்கின்றன. இவ்வாறான வழிபாட்டுத்தலத்தின் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளன. இந்த விடயத்தை மக்கள் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். இது மறக்கக் கூடிய விடயமும் இல்லை. இந்நிலையிலிருந்து விடுபடுவதென்பது ஒரு கடினமான விடயமாக இருந்தாலும், காலம் போகப் போகத்தான் அதற்குரிய மாற்றத்தைப் பெறமுடியும். இருந்த போதிலும் நேரடிப் பாத்திப்புக்குள்ளானவர்கள் இவ்விடயத்தை மறப்பதா, மன்னிப்பதா என்று சிந்திக்கின்றனர். குழந்தைகளின் முகங்களைப் பார்க்கின்றபோது இக்குழந்தைகளையும் எதிரிகளாக பார்த்திருக்கின்றவர்கள் எவ்வாறான எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள் என எண்ணத் தோணுகின்றது.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை இலகுவில் மறந்து விடுவதற்கு முற்படுவார்களா என்கின்ற விடயம் இருக்கின்றது. ஜீவகாருண்ணியத்தைப் போதிக்கின்ற மதமாக கிறிஸ்தவ மதம் காணப்படுகின்றது. அந்த தாக்குதலைச் செய்தவர்களை மன்னிக்கின்றோம் என்ற அடிப்படையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சொல்லிக்கொண்டிருந்தாலும்கூட அவர் கூடச் சொல்கின்றார் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என.
கேள்வி : இத்தாக்குதலால் முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு எவ்வாறு உள்ளது.?
பதில் : காத்தான்குடி பிரதேசம் எமது மட்டக்களப்பு நகருக்கு மிக அண்மையில் இருக்கின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு நகரிலும், காத்தான்குடியைச் சேர்ந்தவர்களின் வர்த்தக நிலையங்கள்தான் அதிகம் காணப்படுகின்றன. முஸ்லிம் மக்களின் வியாபாரம் வெற்றிகரமாகச் செல்கின்றது என்றால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 74 சதவீதமாக உள்ள தமிழ் மக்களின் நுகர்வுகள் முக்கியமானதாக உள்ளது. எனவே முஸ்லிம் மக்களின் வணிகத்தை வளர்த்துக் கொண்டு செல்வதற்கு தமிழ் மக்கள் காரணமாக இருக்கின்றார்கள். இதனால் முஸ்லிம் மக்களின் வணிகம் பாதிப்படையக்கூடிய நிைலமை உள்ளது.
இது இவ்வாறு இருக்க நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்கதலுக்குரிய முக்கிய சூத்திரதாரியாக காத்தான்குடியைச் சேர்ந்தவர்தான் காணப்படுகின்றார். இந்நிலையில் அங்கிருக்கின்ற சகல மக்களையும், அந்த சூத்திரதாரி ஏமாற்றிவிட்டாரா? இது அங்கிருந்த எவருக்கும் தெரியாதா?அங்கிருக்கின்ற பொலிஸ்துறை, புலனாய்வுத்துறை, உள்ளிட்ட அனைவரினதும் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, இவ்வாறான செயல்களைச் செய்திருக்கின்றார்களா? கத்தான்குடியில் சிரேஸ்ட அரசியல்வாதி ஒருவர் இருக்கின்றார், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார், மாகாணசபை அமைச்சராக இருந்திருக்கின்றார், அமைச்சராக, பிரதியமைச்சராக, இராஜாங்க அமைச்சராக, தற்போது கிழக்கு மாகாண ஆளுனராக இருக்கின்றார். இப்படிப்பட்டவர்கள் அங்கிருக்கின்றபோது அவரைக்கூட அங்கிருந்த அடிப்படைவாதிகள் ஏமாற்றியிருக்கின்றார்கள்? அவருக்குக் கூட இவ்வாறான விடயங்கள் சிறிதளவுகூட தெரியாமல் இருந்திருக்கின்றது. இது ஒரு காட்டில் நடைபெறவில்லை. நகருக்குள் இருந்துதான் திட்டமிடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக புலனாய்வுத்துறையினர் அவர்களது துறையில் பலமான ஓட்டைகளை விட்டிருக்கின்றார்கள், அல்லது பலவீனமாக இருந்திருக்கின்றார்கள்.
அமைச்சர் ராஜித சேனாரத்தின கூறுகின்ற கருத்துக்களைப் பார்க்கின்றபோது நாங்கள் மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. கடந்த கால ஆட்சியாளர்கள் தெளஹீத் ஜமாத் என்கின்ற அமைப்பைச் சேர்ந்த 26 நபர்களுக்கு, புலனாய்வுத் துறையில் இணைந்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. என அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். எனவே தெளஹீத் ஜமாத் என்கின்ற அமைப்பு கடந்த காலத்தில புலனாய்வுத் துறையுடன் ஒட்டி உறவாடியிருக்கின்றார்கள்.
கேள்வி : வுவுணதீவுப் பொலிசாரின் படுகொலைச் சம்பவத்தில் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்புத்தான் செய்ததாக தற்போது தெரியவந்துள்ளதே?
பதில் : வவுணதீவில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த நிலையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அப்பாவி முன்னாள் போராளி சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தெளஹீத் ஜமாத் என்கின்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான், அந்த பொலிசாரை கொலைசெய்தார்கள், என்ற உண்மை தெரியவந்துள்ளது. எனவே குற்றவாளிகளுக்குத் தீனிபோடப்பட்டுள்ளதா? அல்லது குற்றவாளிகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளனரா? இந்நிலையில் குற்றவாளிகள் ஒருபக்கம் இருக்க நிரபராதிகளைக் கைது செய்து தங்களது கடமைகளை முடித்துவிடுகின்றார்களா? என்கின்ற கேள்வி எழுகின்றது.
மகிந்த ராஜபக்ச 52 நாட்கள் நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமராக இருந்தார். அக்காலத்தில் வவுணதீவு பொலிசார் படுகொலைச் சம்பவத்தை முன்னாள் போராளிகளின் தலையில் போட்டுவிட்டார்களா என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. தெளஹீத் ஜமாத் என்கின்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிகவும் கச்சிதமாக அந்த விடயத்தை செய்து முடித்திருக்கின்றார்கள். வனாத்தமுல்லை வரை தெளஹீத் ஜமாத் என்கின்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை கச்சிதமாகக் கொண்டு சென்றவர்கள் யார்? இவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் யார்? அல்லது புலனாய்வுத்துறை செய்கின்ற செயற்பாடுகளில் தெளஹீத் ஜமாத் என்கின்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றார்களா? என எண்ணத் தோன்றுகின்றது.
இங்கு பாரிய தவறு நடந்திருக்கின்றது. எனவே பாதுகாப்புத் துறையை சரியாக வழிநடாத்திக் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கும் இருக்கின்றது.
(வ.சக்திவேல்)
அடேய் கிழட்டு தமிழ் பயங்கரவாதியே தீவிரவாதத்தை போதித்த பிரபாகரனை இன்றுவரை தலைவனென்று கூறிக்கொண்டு இன்னொரு தீவிரவாதத்தை பற்றி கதைக்க வெட்கமில்லையா?
ReplyDelete@NGK, முஸ்லிம் பயங்கரவாதிகளின் வர்த்தகங்களை அழித்தால், நமது நாட்டுக்கு தானே நன்மை.
ReplyDeletemistake is mistake even tamil or muslime
ReplyDeleteதயவு செய்து உங்கள் கருத்துக்களை மறுப்புக்களை விவாதங்களாக முன்வையுங்கள். கறுத்துச் சொல்வதை விட்டுவிட்டு தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுவது மனுக்குலத்துக்கு எதிரானது. அது இறுதியில் நாம் சார்ந்திருக்கும் இனங்களை பாதிக்கும் இனவாதமாகும். தயவு செய்து ஆக்கபூர்வமான விவாதங்களையும் எதிர் விவாதங்களையும் மட்டுமே முன்வையுங்கள்.
ReplyDelete@ NGK
ReplyDeleteஅப்பு சிலருக்கு சொல்லி புரிய வைக்கலாம் கேக்க மறுத்தால் பர்மா மாதிரி வந்த நாட்டுக்கே கப்பலேற்ற படுவீர்கள். வெக்கம் கேட்ட சக்கிலிய பிறப்படா நீ
@Anush.
ReplyDelete30 வருடங்கள் பயங்கரவாதத்தில் ஊறிய உங்களை முள்ளிவாய்க்காலில் புதைத்தும் இன்னும் பயங்கரவாதி பிரபாகரனை தூக்கிப்பிடிக்க்கும் பறையனுங்கல் நீங்கள் இந்த நாட்டில் வாழலாம். தீவிரவாதிகளை எதிர்க்கும் நாம் வாழ முடியாதா? சந்தர்ப்பம் கிடைத்தால் பன்றியின் மலத்தை விரும்பி உண்பவர்கள் தான் உன் கிழட்டு தமிழ் அரசியல்வாதிகள்
appadiyayin neenkal south indiyawukkum matrumoru saaraar wada indiyawukkum, portugal netherlands ena owworu naattukkum aetrappada waendume? palankudi mattumthan meethamahum?
ReplyDeletealanthu paesunko?
மாறி மாறி நாங்கள் ஆளை ஆள் குற்றம் சாட்டி அடித்துக் கொண்டு நம் நாட்டையும் மக்களையும் கொன்றொழித்து பயங்கர வாதிகளின் இலக்கை நிறை வேற்றவா கிறுக்கனுகாள் சண்டை பிடிக்கின்றீர்கள்
ReplyDelete