Header Ads



பியசேனவிற்கு 4 வருட, கடூழிய சிறைத்தண்டனை

அரசாங்க வாகனம் ஒன்றை சட்ட விரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியான திகாமடுல்ல மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேனவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 54 இலட்சம் ரூபா தண்டப் பணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவ்வாறு தண்டப் பணத்தை செலுத்தாவிடின் மேலும் இரண்டு வருடங்களுக்கு கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

2015 மே் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பிராடோ (Prado)ரக வாகனத்தை பாராளுமன்ற உறுப்பினர் பதவி இலக்கப்பட்ட பின்னரும் சட்ட விரோதமாக முறையில் பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

நீண்ட விசாரணைகளின் பின்னர் குற்றவாளி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு எவ்வித சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. அவர் அவாறு செய்திருந்தால் தவறுதான் அனால் அவர்மட்டும் தானா இந்த தவறை செய்துள்ளார் ? சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரி செயட்படவேண்டும். பாவம் அவர் TNA காரர் சட்டம் தன் வேலையை செய்துவிட்டது, ஒரு வேல அவர் UNP அல்லது UPFA உறுப்பினராக இருந்திருந்தால் சட்டம் வேறுவிதமாக செயட்பட்டிருக்கும்.

    ReplyDelete
  2. Stupid Punishment. All the Dangerous Criminals Politicians are staying outside... When they will arrest them??
    Is it a Joke. That is this law??
    Just release him. Even the Prado Not that worth..

    ReplyDelete

Powered by Blogger.