Header Ads



மேலும் 4 இஸ்லாமிய, அமைப்புகளுக்கு தடை வருகிறது...?

சிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ், மேலும் 4 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவை என கண்டறியப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும், ஜமியத்து மில்லாது இப்ராகிம் ஆகிய அமைப்புகள் கடந்த வாரம் சிறிலங்கா அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தடை செய்யப்பட்டன.

இந்த அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த மேலும் நான்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளே அடுத்த வாரம் தடை செய்யப்படவுள்ளன.

2 comments:

  1. Hello Thow!!!

    Exit immediately from your leaders and preachers Whatsapp group, face book contacts and any other networks. Destroy their books, CDs and any other materials if you have. Also try forget all what you have learnt from them and become a general Muslim.

    ReplyDelete
  2. இது காலத்தின் மிகக் கட்டாய தேவையாக இருக்கினறது. மிக வேகமாக வளர்ந்து வரும் பள்ளிவாசல்களின் தொகையினை மட்டுப்படுத்துங்கள். தேவையான இடங்களில் மாத்திரம் பள்ளிகளை அமையுங்கள். குர்ஆன் மற்றும் அரபு மதரஸாக்களை அரசின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக அமைத்துக் கொள்ளுங்கள். முஸ்லிம்களுக்கு எதிரான துவேசம் நாடு முழுவதும் மிகவும் பரவலாகக் காணப்படுகின்றது. எங்களுக்கு பெருமளவில் உதவக்கூடிய வேற்றுமதத்தவர்களும் இல்லாமலில்லை. எங்கள் அருகிலேயே அவர்கள் இருக்கின்றார்கள். அவர்களையும் இக்கட்டான நிலைமைக்குள் தள்ளி விட வேண்டாம். தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் பாதுகாப்புத்துறைக்கு இரகசியமாகவேனும் அறிவியுங்கள். நிலைமைகள் மிக விரைவாக சீர்திருந்த அல்லாஹ்வைப் பிரார்த்தியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.