கொச்சிக்கடை தேவாலய தற்கொலைதாரியின் சகோதரன் உட்பட 3 பேர் கைது
கொழும்பு, கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் சகோதரன் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்ததாக அத தெரண நீதிமன்ற செ்யதியாளர் கூறினார்.
கொழும்பு, கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி, கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய நபருக்கு சொந்தமான வாகனத்திலேயே வந்திருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணை சம்பந்தமான அறிக்கை சமர்பிக்கும் போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இதனைக் கூறியுள்ளனர்.
Post a Comment